கேரளாவில் விமானியாக ஆசைப்பட்ட சிறுவனுக்கு ஹெலிகாப்டரை சுற்றிக்காட்டிய ராகுல் காந்தி!

கேரளாவில் விமானியாக ஆசைப்பட்ட சிறுவனுக்கு ஹெலிகாப்டரை சுற்றிக்காட்டிய ராகுல் காந்தி!

ராகுல் காந்தி

கேரளாவில் பைலட் ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட 9 வயது சிறுவனை தனது ஹெலிகாப்டரின் காக்பிட் அறைக்கு கூட்டிச் சென்று அசத்தியுள்ளார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி.

  • Share this:
கேரள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன்னாள் காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி அம்மாநிலத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். மீனவர்களுடன் கடலுக்குள் சென்று குளியல் போட்டது, பிரச்சாரத்தின் கடைசி நாளில் வயநாடு தொகுதியில் உள்ள திருநெல்லி ஆலயத்திற்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது 9 வயது சிறுவன் அத்வைத்தை டீக்கடை ஒன்றில் சந்தித்தார் ராகுல் காந்தி. சிறுவனுடைய ஆங்கில மற்றும் ஹிந்தி மொழித் திறனைக்கண்டு வியந்த ராகுல் காந்தி, நீ பெரியவனான பின் என்னவாக ஆசைப்படுகிறாய் என கேட்டார்.

அதற்கு நான் விமானியாக ஆக வேண்டும் என்ற ஆசை கொண்டிருப்பதாக ராகுலுக்கு சிறுவன் அத்வைத் பதிலளித்தான். மேலும் அப்போது பேசிக்கொண்டிருந்த போது ஹெலிகாப்டரை தான் அருகில் பார்த்ததில்லை என்பதையும் அவன் வெளிப்படுத்தியிருக்கிறான்.

இதன் பின்னர் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 5) தன்னுடைய ஹெலிகாப்டரை காண வருமாறு சிறுவனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ராகுல் காந்தி. கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு சிறுவனை வரச் செய்த ராகுல் காந்தி, அவனை தனது ஹெலிகாப்டரின் விமானி இருக்கும் அறையான காக்பிட்டுக்கு அழைத்துச் சென்று காட்டியுள்ளார். மேலும் சிறுவன் அத்வைத்துடன் உரையாடிய ராகுல், ஹெலிகாப்டர் குறித்து சில கேள்விகளையும் கேட்டுள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Rahul Gandhi (@rahulgandhi)


இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடீயோவாக பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “எந்த ஒரு கனவும் மிகப் பெரியது கிடையாது; சிறுவன் அத்வைத்தின் கனவை நனவாக்க நாங்கள் முதல் படியை எடுத்துள்ளோம். இப்போது ஒரு சமுதாயத்தையும் ஒரு கட்டமைப்பையும் உருவாக்குவது நமது கடமையாகும், அது அவருக்கு பறக்க ஒவ்வொரு வாய்ப்பையும் கொடுக்கும்.” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இதே போன்று சாலையோரத்தில் சிறுவன் ஒருவனை சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, அச்சிறுவன் ஒரு விளையாட்டு வீரன் என்பதை அறிந்து கொண்டு அவனுக்காக ஒரு ஸ்போர்ட்ஸ் ஷூவை பரிசாக அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: