முகப்பு /செய்தி /இந்தியா / புயலைக் கிளப்பிய பாதிரியாரின் ‘லவ் ஜிகாத்’ பேச்சு!

புயலைக் கிளப்பிய பாதிரியாரின் ‘லவ் ஜிகாத்’ பேச்சு!

 Bishop Joseph Kallarangatt

Bishop Joseph Kallarangatt

நார்கோடிக்ஸ் ஜிகாத் என்ற புது வார்த்தையை இப்போது தான் கேள்விப்படுகிறேன். போதைப் பொருளால் ஒரு மதத்துக்கு மட்டும் பாதிப்பு கிடையாது

  • Last Updated :

கேரள முஸ்லிம்கள் ‘நார்கோடிக் ஜிகாத்’ எனும் இயக்கத்தை தொடங்கி பிற மதங்களைச் சேர்ந்தவர்களை போதைக்கு அடிமையானவர்களாக மாற்றி வருவதாக கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் பேசியது சர்ச்சையான நிலையில். முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர்கள் பாதிரியாரின் கருத்தை கண்டித்துள்ளனர்.

கேரளாவின் பாலா எனும் பகுதியில் அமைந்துள்ள சைரோ மலபார் கத்தோலிக்க பேராலயத்தின் பாதிரியாரான ஜோசப் கல்லரங்கட் என்பவர், கடந்த புதனன்று கோட்டயம் மாவட்டத்திலுள்ள மார்த் மரியம் தேவாலயத்தில் பேசிய போது, “கேரளாவில் இளைஞர்கள் லவ் ஜிகாத் மற்றும் நார்கோடிக்ஸ் ஜிகாத் போன்றவற்றால் எதிர்பாராத நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

போதைக்கு அடிமையாகிய பல இளைஞர்கள் வேலையிழந்துள்ளனர், படிப்பை கைவிட்டுள்ளனர், இவற்றிற்கெல்லாம் காரணம் நார்கோடிக்ஸ் ஜிகாத் தான். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஆயுதங்கள் ஏந்தி போராட முடியாது என்பதால் முஸ்லிம் இல்லாதவர்களை நசுக்க இது போன்று வேறு சில ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

மேலும், லவ் ஜிகாத் என்ற பெயரில் முஸ்லிம் அல்லாத பெண்கள் குறிப்பாக கிறிஸ்தவ பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மதமாற்றம் செய்து, அவர்களை நாசப்படுத்தி தீவிரவாத செயல்களுக்காகவும் பயன்படுத்தி வருவதாக பாதிரியார் கூறினார்.

Also Read: செக்ஸ் வீடியோ காட்டி 4ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த தலைமை ஆசிரியர்!

பாதிரியாரின் இந்த பேச்சு சர்ச்சையானது. இஸ்லாமிய இயக்கங்கள் பாதிரியாரின் பேச்சை கண்டித்துள்ளன.

முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களிடையே பேசுகையில் பாதிரியாரின் பேச்சை கண்டித்து பேசுகையில், “நார்கோடிக்ஸ்க்கு (போதைப் பொருள்) என எந்த மதச்சாயமும் கிடையாது. அது சமூக விரோதிகளின் சாயம் மட்டுமே கொண்டுள்ளது.

நார்கோடிக்ஸ் ஜிகாத் என்ற புது வார்த்தையை இப்போது தான் கேள்விப்படுகிறேன். போதைப் பொருளால் ஒரு மதத்துக்கு மட்டும் பாதிப்பு கிடையாது, அது சமூகத்தையே சீரழிக்கிறது. அது கவலையளிக்ககூடிய ஒன்று, அதற்கெதிரான சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம்.

Also Read:   பாஜகவின் ‘காங்கிரஸ் இல்லா இந்தியா’ கனவை பூர்த்தி செய்யும் ஆம் ஆத்மி – திரிணாமுல் காங்கிரஸ்!

பாலா பாதிரியார் செல்வாக்குமிக்க மத அறிஞர். அவர் என்ன அர்த்தத்தில் இதனை கூறினார் என புரியவில்லை. பொறுப்பான மனிதர்கள் அடிப்படை ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான இதுபோன்ற பொறுப்பற்ற விஷயங்களை பேசக்கூடாது. இதனால் மதநல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படும்.” என தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான விடி சதீஷன் இது குறித்து கூறுகையில் இது எல்லை மீறிய பேச்சு என தெரிவித்தார். மிகவும் தாழ்மையுடன் நான் கேட்டுக்கொள்வதெல்லாம், மதநல்லிணக்கத்துக்கும், இருதரப்பு நம்பிக்கைக்கும், இருக்கும் சூழலை கெடுக்கும் விதமான பேச்சுக்கள், கருத்துக்களை மத தலைவர்கள் யாரும் தெரிவிக்கக் கூடாது என கேட்டுக்கொள்வதாக கூறினார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Christianity, Islam, Islamic Jihad Militant, Kerala, Pinarayi vijayan