ஹோம் /நியூஸ் /இந்தியா /

மணக்கோலத்தில் செண்டை மேளம் அடித்து ஆடிய மணப்பெண்.. வைரலாகும் வீடியோ!

மணக்கோலத்தில் செண்டை மேளம் அடித்து ஆடிய மணப்பெண்.. வைரலாகும் வீடியோ!

மணக்கோலத்தில் செண்டை மேளம் வாசித்த மணப்பெண்

மணக்கோலத்தில் செண்டை மேளம் வாசித்த மணப்பெண்

Kerala viral video | திருமண கோலத்தில் செண்டை மேளம் அடித்து, ஆடிய மணப்பெண்ணின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கண்டாணசேரி  பகுதியை சார்ந்த ஸ்ரீகுமார் மற்றும் ரஷ்மி தம்பதியினரின் மகள் சில்பா. இவருக்கும் கண்ணூர் மாவட்டத்தை சார்ந்த தேவ ஆனந்த் என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை குருவாயூர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.

இருவரும் துபாயில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றனர். திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சிக்காக மண்டபத்திற்கு வந்த சில்பா, தனக்கு செண்டை மேளம் அடிக்க ஆசையாக இருக்கிறது என  கூறியுள்ளார். இதை அடுத்து மாப்பிள்ளை வீட்டார் சம்மதித்த பின்பு சில்பா உற்சாகமாக ஆடியபடி செண்டை மேளம் அடித்து அசத்தியுள்ளார். இந்த நிகழ்வை அங்கிருந்த சிலர் செல்போன்களில் படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.

மணக்கோலத்தில் பெண்  செண்டை மேளம் அடித்து ஆடிய இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. சில்பா பஞ்ச வாத்தியம் கற்றவர் என்பதும், இவரது தந்தை செண்டை மேள வித்வான் என்பதும் குறிப்பிடத்தக்கது

First published:

Tags: Kerala, Viral Video