இந்தியாவில் முதன் முதலாவதாக ரூ.100 கோடி மதிப்பிலான H 145 ரக சொகுசு ஹெலிகாப்டரை ஆர்பி குரூப் நிறுவனங்களின் சேர்மேன் ரவி பிள்ளை, வாங்கியுள்ளார். உலகளவில் 1,500 H 145 ரக ஹெலிகாப்டர்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
ரூ.250 கோடி சொத்து மதிப்பை கொண்ட தொழிலதிபர் ரவி பிள்ளைக்கு பல்வேறு நிறுவனங்களும் சொந்தமாக உள்ளன. அவரது, நிறுவனங்களில் சுமார் 70,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சொகுசு ஹெலிகாப்டரின் சிறப்ப என்ன?
இந்த ஹெலிகாப்டர் தொழிலதிபர் ரவி பிள்ளையின் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக உற்சாகம் அளிக்கக்கூடியதாக இருக்கும். ஏனெனில், அவருக்கு மாநிலம் முழுவதும் சொகுசு ஹோட்டல்கள் உள்ளதால், மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு தனது விருந்தினர்களை அழைத்துச் செல்ல இது பயன்படுத்தப்படும் என்று ஆர்பி குழுமத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Also read... நீட் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரங்கள் இல்லை - தேசிய தேர்வு முகமை
கோழிக்கோட்டில் உள்ள ராவிஸ் கடவு, கொல்லத்தில் உள்ள ராவிஸ் அஷ்டமுடி மற்றும் திருவனந்தபுரத்தில் தி ராவிஸ் கோவளம் ஆகிய இடங்களில் உள்ள ஹோட்டல்களில் ஆர்பி குழுமம் ஹெலிபேடுகளைக் கொண்டுள்ளது. ரவி பிள்ளை, தனது தொண்டு நடவடிக்கைகளுக்காகவும், அரசியல் கட்சிகளை கடந்து உயர் அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக உள்ளவராகவும் அறியப்படுகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Helicopter