Home /News /national /

மலை உச்சியில் இருந்து உருண்டு வந்த பாறை.. பைக் டிரிப் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கொடூரம் - பதைபதைக்கச் செய்யும் வீடியோ

மலை உச்சியில் இருந்து உருண்டு வந்த பாறை.. பைக் டிரிப் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கொடூரம் - பதைபதைக்கச் செய்யும் வீடியோ

Wayanad accindent

Wayanad accindent

Kerala Viral Video: வயநாட்டிற்கு பைக் ட்ரிப் சென்ற வாலிபர்களின் பைக்கில் எதிர்பாராத விதமாக பாறை விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    கேரள மாநிலம் வயநாட்டில் இளைஞர் ஒருவர் மலை பகுதியல் பைக்கில் சென்று கொண்டிருந்த போது பாறை ஒன்று எதிர்பாராத விதமாக உருண்டுவந்து விழுந்ததில் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் வயநாடு அருகே உள்ள தாமரசேரி என்ற பகுதியில் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

    ஆறு பேர் கொண்ட குழு ஒன்று வயநாட்டிற்கு சாலை மார்க்மாக பைக் ட்ரிப் சென்றுள்ளது. இதில் அபிநவ் 20 மற்றும் அனிஷ் 26 ஆகிய நண்பர்கள் ஒரு பைக்கில் சென்றுள்ளனர். முன்னே அமர்ந்து அபிநவ் வண்டி ஓட்ட, அனிஷ் அவருக்கு பின்னே அமர்ந்து வந்துள்ளார். வண்டி தாமரசேரி மலைப் பகுதியின் ஐந்தாவது ஹேர்பின் வளைவை தாண்டி ஆறாவது ஹேர்பின் வளைவில் சென்றுகொண்டிருக்கும் வேலையில், எதிர்பாராத விதமாக மலையில் இருந்து ஒரு பாறை உருண்டு வந்து சாலையில் விழுந்தது.

    அந்த பாறை விழும் வேளையில் இவர்கள் வண்டியும் எதிர்செல்ல, வண்டியின் பின்பகுதியில் மோதியுள்ளது. இதில், வண்டியிலிருந்து வீசப்பட்டு மலைக்கு கீழ் உள்ள பள்ளத்தில் விழுந்துள்ளனர். இவரும் படுகாயம் அடைந்த நிலையில் கோழிக்கோடு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், அபினவ் உயிரிழந்துள்ளார்.



    அனிஷுக்கு தொடர்ந்து மருத்து சிகிச்சை அளிக்கபட்டுவருகிறது. உயிரிழந்த 20 வயதான அனிஷ் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

    இதையும் படிங்க: மகனுக்காக ஜாமீன் வேண்டி வந்த பெண்ணை மசாஜ் செய்யச் சொன்ன பலே போலீஸ்

    இவர்கள் இருவருக்கு பின்னால் வண்டியில் சென்றுகொண்டிருந்தவர்கள் தங்கள் பயணத்தை யதார்த்தமாக வீடியோ எடுத்துக்கொண்டிருந்த நிலையில், இந்த விபத்து அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Accident, Viral Video

    அடுத்த செய்தி