கேரள மாநிலத்தில் பியூட்டி பார்லர் முன்பு நின்று செல்போன் பேசியதற்காக பெண்ணை குழந்தையின் கண் முன்பே நடுரோட்டில் வைத்து செருப்பால் அடித்து உதைக்கும் பார்லர் பெண் உரிமையாளரின் அதிர்ச்சிகர வீடியோ வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த சாஸ்தமங்கலம் பகுதியை சேர்ந்த மீனா என்பவர் அதே பகுதியில் பெண்களுக்கான பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். மருதங்குழி பகுதியை சார்ந்த சேபா என்ற பட்டதாரி பெண் ஒருவர் தனது குழந்தையுடன் நகையை அடகு வைப்பதற்காக சாஸ்தமங்கலம் பகுதிக்கு வியாழக்கிழமையன்று வந்துள்ளார்.
அப்போது மீனாவுக்கு சொந்தமான பியூட்டி பார்லர் முன்பு நின்று அப்பெண் செல்போனில் பேசிக் கொண்டே இருந்துள்ளார்.இதைப் பார்த்த மீனா அந்தப் பெண்ணுடன் வாக்குவாதட்தில் ஈடுபட்டு, நடுரோட்டில் தள்ளி விட்டுள்ளார் . பின்பு தனது செருப்பை கழற்றி நடுரோட்டில் வைத்து அவரது மகளின் முன்னிலையில் தாறுமாறாக தாக்கியுள்ளார். இதை தட்டி கேட்க சென்ற சிலரையும் பியூட்டி பார்லர் உரிமையாளரான பெண் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் வீடியோ எடுத்தவர்களையும் திட்டியுள்ளார்.
மேலும் படிக்க: திருப்பதியில் அலைமோதும் கூட்டம்... 7 கிமீ தூரத்துக்கு கியூ... ஏழுமலையானை தரிசிக்க 2 நாள் ஆகிறது..
தனது அம்மாவை செருப்பால் அடிப்பதை பார்த்த மகள் நடுரோட்டில் நின்று அழுதுள்ளார்.தொடர்ந்து பட்டதாரி பெண்ணை செருப்பால் அடித்து உதைக்கும் மீனாவின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .இந்த நிலையில் திருவனந்தபுரம் மியூசியம் போலீசார் மீனாவின் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Attack on Women, CCTV Footage, Kerala