Home /News /national /

கேரளாவில் கல்வீச்சு தாக்குதலுக்கு பயந்து ஹெல்மெட் அணிந்து பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்..!

கேரளாவில் கல்வீச்சு தாக்குதலுக்கு பயந்து ஹெல்மெட் அணிந்து பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்..!

ஹெல்மெட் அணிந்து பேருந்து ஓட்டும் ஓட்டுநர்கள்

ஹெல்மெட் அணிந்து பேருந்து ஓட்டும் ஓட்டுநர்கள்

கேரளாவில் தாக்குதலுக்கு பயந்து ஹெல்மெட் அணிந்தபடி பேருந்துகளை ஓட்டுநர்கள் இயக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India
கேரளாவில் பிஎப்ஐ அம்  பேருந்துகள் மீது கடுமையான தாக்குதல் நடத்துவதால் ஹெல்மெட் அணிந்து பேருந்துகளை ஓட்டுநர்கள் ஓட்டி வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள பிஎப்ஐ அமைப்பின் தலைவர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட இடங்களில்  சோதனை நடத்தினர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 70 மையங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. தேசிய தலைவர் ஓ.எம்.ஏ. சலாம், தேசிய செயலாளர் நஸ்ருதீன் எளமரம் உள்ளிட்ட 106 பேர் சோதனையில் கைது செய்யப்பட்டனர். மேலும் கேரளாவைச் சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டனர். மாநிலத் தலைவர் சி.பி. முஹம்மது பஷீர், தேசிய அவை உறுப்பினர் பேராசிரியர். பி. கோயா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : PFI அமைப்பினர் பந்த்.. கலவரம்... கல்வீச்சு.. பேருந்துகள் உடைப்பு... கேரளாவில் பதற்றம்
 இந்த நிலையில், என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக கூறி நடத்தப்பட்ட நாடு தழுவிய என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநிலக் குழு இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 22 பேர் கைது செய்யப்பட்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேரளாவில் பந்த்தை மீறி வாகனங்களை இயக்கிய பேருந்துகளின் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கல்வீச்சு தாக்குதலுக்கு பயந்து கேரள போக்குவரத்து துறை ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்தபடி பேருந்துகளை  இயக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Published by:Arunkumar A
First published:

Tags: Bandh, Kerala, Viral Video

அடுத்த செய்தி