பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் உலக பிரசித்திபெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன கேரளா மாநிலம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது.
கண்ணகி கோவலன் இறந்த பிறகு மதுரையை எரித்து விட்டு கோபத்துடன் கொடுங்கலூர் சென்று வானுலகம் அடையும்முன் செல்லும் வழியில் ஓய்வெடுத்த இடம் தான் ஆற்றுக்கால் என கூறப்படுகிறது. இங்கு பகவதி அம்மன் என்ற பெயரில் கண்ணகிக்கு கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பூரம் நட்சத்திர நாளில் பொங்கல் வழிபாடு நடைபெறுகின்றன.
இந்த பொங்கல் திருவிழாவில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வருகின்றனர். சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவில் பொங்கல் வைக்கப்படுகிறது. பல லட்சம் பெண்கள் குவிந்து வழிபாடு செய்யும் இந்த ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் கடந்த 1997 ஆம் ஆண்டு 15 லட்சம் பெண்கள் மற்றும் 2009 ஆம் ஆண்டு 25 லட்சம் பெண்கள் பொங்கலிட்டு உலக சாதனையை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றனர். அந்த சாதனை ஆண்டு தோறும் பொங்கல் வழிபாடு அதிகரித்து வருவதால் சாதனையும் தொடர்ந்து நீடித்து வருகிறது.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் பொது இடங்களில் பொங்கல் வைக்க அனுமதி இல்லாத காரணத்தால்இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை 8 ஆம் தேதி திருவிழா நிறைவு பெறும்.
ஆற்றுகால் பொங்கலையை முன்னிட்டு இன்று திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு கேரளா அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொங்கலிட வரும் பக்தர்களுக்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சுமார் 3000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 10.30 மணிக்கு கோயில் தந்திரி ஆலய ஸ்ரீகோயிலில் இருந்து தீபம் எடுத்து வந்து தலைமை பூசாரி முதலில் பண்டார அடுப்பில் பற்ற வைத்து பொங்கல் வழிபாடை துவங்கி வைத்தார். அதன் பின் அனைத்து அடுப்புகளிலும் நெருப்பு பற்ற வைக்கப்பட்டது.
திருவனந்தபுரம் நகரப்பகுதி முழுவதுமாக லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வழிபாடு நடத்தியதால் நகர் பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணபட்டது. மதியம் 2.30 நைவேத்திய பூஜையுடன் பொங்கல் வழிபாடு நிறைவடையும். அப்போது குட்டி விமானம் மூலம் பொங்கல் வழிபாடுகளில் அர்ச்சனை பூக்கள் தூவபட்டது. இதில், ஆலய நிர்வாகம் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பாக பக்தர்களுக்கு இலவசமாக குடிநீர் மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kerala, Pongal festival, Sabarimala Temple