கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரள மாநிலம் சமீபத்தில் தேர்தலை சந்தித்தது. அங்குள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 16-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஆளும் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்கிடையே போட்டி நிலவுகிறது. கேரள மாநிலத்தை பொறுத்தவரையில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சி மாறி மாறி ஆட்சியில் அமர்கின்றனர். இந்த இரண்டு கட்சிகளுக்கிடையேதான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. கம்யூனிஸ்ட்களை பொறுத்தவரையில் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பினராயி விஜயனின் அரசியல் மட்டுமல்ல கம்யூனிஸ்ட்களில் அரசியலும் கேரளத்தை நம்பியே உள்ளது. இந்தியாவில் 2001-ம் ஆண்டு திரிபுரா, மேற்குவங்கம், கேரளா என மூன்று மாநிலங்களில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்டகளுக்கு 2011-க்கு பிறகு இறங்கு முகமாக அமைந்தது.
மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் ஆலைகளுக்கு நிலங்களை அபகரித்ததன் காரணமாக அம்மாநில மக்களின் இதயங்களில் இருந்து வெளியேறியது. 2011-ல் மம்தா அங்கு ஆட்சியை கைப்பற்றினார். தொடர்ந்து 10 ஆண்டுகளாக அவர் முதலமைச்சராக உள்ளனர். மேற்கு வங்கத்தில் பா.ஜ.க காலூண்ற ஆரம்பித்தன் காரணமாக இன்று அங்கு மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கேரளத்தில் மல்லுக்கட்டும் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சிகள் மேற்குவங்கத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதேபோல் 25 வருடங்களாக திரிபுராவில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட்கள் 2018-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை இழந்தது. கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இருப்பது கேரளத்தில் மட்டுமே.
1987-ம் ஆண்டுகளில் இருந்து கேரளத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் மாறி மாறி ஆட்சி அதிகாரத்துக்கு வருகின்றனர். இந்த முறை அந்த வரலாற்றை கம்யூனிஸ்ட் திருத்தி எழுத வேண்டும். வரலாறு தொடர்ந்தால் இந்தியாவில் கம்யூனிஸ்ட் ஆளும் கடைசி மாநிலமும் அவர்களின் கையைவிட்டுப்போய்விடும். இதுதான் கம்யூனிஸ்ட்களின் நிலை. இந்த சவால்களை கடந்தாக வேண்டும்.
காங்கிரஸ் கட்சிக்கும் அதேநிலைதான் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் காங்கிரஸ் தனது வெற்றியை பறிக்கொடுத்து வருகிறது. எனவே கேரளத்தில் ஆட்சியமைப்பதில் தீவிரமாக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றதை நினைவில் கொள்ள வேண்டும். ராகுல்காந்தி கேரளாவில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது.
பாஜகவும் கேரளத்தில் கால் பதிக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. சபரிமலை விவகாரத்தை கையிலெடுத்து தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டது. பாஜக தேசிய தலைவர்கள் கேரளத்தில் குவிந்தனர். கடவுளின் தேசத்தில் காவி கொடியை பறக்கவிடுவதில் பா.ஜ.கவும் மும்முரமாக இருக்கிறது. கேரள மக்களின் தீர்ப்பை தெரிந்துக்கொள்ள மே-2 வரை காத்திருக்கத்தான் வேண்டும்.
தேர்தல் முடிவுகளை News18Tamil.com ல் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Congress, Election 2021, Kerala, Kerala Assembly Election 2021, Kerala CM Pinarayi Vijayan