Kerala Election 2021: கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல்; மலப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு!

கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல்

கேரள சட்டமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள மலப்புரம் பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் சுனில் அரோரா தெரிவித்தார்.

  • Share this:
கேரள மாநிலத்தில் ஏப்ரல் 6 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

டெல்லியின் விஞ்ஞான் பவனில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்தார். சுனில் அரோரா 5 மாநில தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.

அதன்படி 14 மாவட்டங்களில் 140 தொகுதிகளை உள்ளடக்கிய கேரள மாநிலத்தில் ஏப்ரல் 6 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கேரளா - தேர்தல் அட்டவணை வெளியீடு - 140 தொகுதிகள்

1. வேட்பு மனு தாக்கல் துவக்கம்: மார்ச் 3
2.வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்: மார்ச் 20
3. வேட்பு மனு பரிசீலனை: மார்ச் 22
4. வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச்
5. வாக்குப் பதிவு நாள்: ஏப்ரல் 6
6. வாக்கு எண்ணிக்கை நாள்: மே 2

கேரள சட்டமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள மலப்புரம் பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 91 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. பாஜக நேமம் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. நடப்பு கேரள சட்டசபையின் ஆயுட் காலம் ஜூன் 1ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

மலப்புரம் தொகுதி எம்.பியாக இருந்த IUML கட்சியின் குன்ஹாலிகுட்டி தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ததால் அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட முக்கிய தகவல்கள்:

* 5 மாநிலங்களில் 18.8 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர், வாக்காளர்களுக்காக 2.7 லட்சம் வாக்கு மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

* ஒரு வாக்குச்சாவடியில் 1,000 வாக்காளர்களுக்கு மட்டுமே அனுமதி

* வேட்பாளருடன் சேர்த்து மொத்தம் 5 நபர்கள் மட்டுமே வாக்கு சேகரிக்க அனுமதி

* 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குகள் கட்டாயம் அல்ல, விருப்பப்பட்டால் மட்டுமே தபால் வாக்குகள் அளிக்கலாம்

* தேர்தல் அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்
Published by:Arun
First published: