கேரள சட்டமன்றத்தில் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்த தேவிக்குளம் எம்.எல்.ஏ

எம்.எல்.ஏ.ராஜா

2021 சட்டமன்றத்தேர்தலில் தேவிக்குளம் தொகுதியில் போட்டியிட்ட ராஜா 7848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

 • Share this:
  கேரளாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அபார வெற்றிபெற்றது. இதனையடுத்து கடந்த 20-ம் தேதி முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்றார்.அவருடன் 20 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது. இதையடுத்து சட்டசபையை நடத்துவதற்கு இடைக்கால சபாநாயகராக பிடிஏ ரகீம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார்.

  சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் கேரள மாநில சி.பி.எம். எம்.எல்.ஏ. ராஜா தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். இவர் தேவிகுளம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்

  Also Read: கொரோனா விதிகளை மீறி, மதுரையில் வானில் திருமணம்: விமான ஊழியர்கள் மீது நடவடிக்கை!

  ராஜாவின் பெற்றோர்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். கோயம்புத்தூரில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற ராஜா வழக்கறிஞராக பணி செய்து வருகிறார். 2009-ம் ஆண்டில் இருந்து தேவிக்குளம் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2021 சட்டமன்றத்தேர்தலில் தேவிக்குளம் தொகுதியில் போட்டியிட்ட ராஜா 7848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

  இந்நிலையில் கேரள சட்டப்பேரவையில் இவர் தமிழில் பதவியேற்றுக்கொண்டார். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜா குறித்து நெட்டிசன்கள் அதிகம் தேடத் தொடங்கிவிட்டனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: