சபரிமலையில் தினமும் 5,000 பேரை அனுமதித்த கேரள உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு

சபரிமலையில் தினமும் 5,000 பேரை அனுமதித்த கேரள உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு

சபரிமலை மாதிரிப் படம்

சபரிமலை ஐயப்பன்கோயிலில் தினசரி 5 ஆயிரம் பேரை அனுமதிக்க உத்தரவிட்ட கேரள உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

 • Share this:
  கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த சபரிமலையில் தற்போது குறிப்பிட்ட அளவு பக்தர்களுடன் கோயில் நடை திறக்கப்படுகிறது. இந்தநிலையில், சபரிமலை ஐயப்பன்கோயிலில் நாள்தோறும் 5 ஆயிரம் பேரை அனுமதிக்கும்படி அண்மையில் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கேரள அரசை கலந்து ஆலோசிக்காமல் உயர்நீதிமன்றம் முடிவை அறிவித்துள்ளதாகக்கூறி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

  மேலும் நாள்தோறும் 5 ஆயிரம் பேர் வரை தரிசனத்துக்கு அனுமதித்தால், முன்கள பணியில் உள்ள போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினருக்கு பாதிப்பு அதிகரிக்கும் என்றும் கேரள அரசு முறையிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் முன்பே மாநில அரசு வார நாட்களில் 2 ஆயிரம் பேரையும், வார இறுதி நாட்களில் 3 ஆயிரம் பேரையும் அனுமதிக்க திட்டமிட்டிருந்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து புதுவகை கொரோனா வைரஸ் வந்துள்ளதால் இந்தவழக்கு குறித்து விரைந்து முடிவெடுக்கும்படியும் கேரள அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: