• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கொரோனா தீவிரம் குறைவதால் ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிப்பு - கேரள அரசு

கொரோனா தீவிரம் குறைவதால் ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிப்பு - கேரள அரசு

மாதிரி படம்

மாதிரி படம்

கொரோனா தொற்று தீவிரம் குறைந்து வருவதால் மாநிலத்தில் புதிய தளர்வுகளை கேரள அரசு அறிவித்துள்ளது.

  • Share this:
    நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை குறைந்து வரும் நிலையில் கேரளா மாநிலத்தில் திடீரென கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. 2-வது அலையில் ஆரம்பத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 13,000 இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளாவில் தினசரி தொற்று பாதிப்பு 20,000-க்கும் அதிகமாக இருந்தது.

    கேரளாவில் கொரோனா தொற்று தீவிரமாக இருந்ததால் இது 3-வது அலையைின் தொடக்கமாக இருக்கலாம் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இந்த நிலையில் கொரோனா நிலவரம் குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சட்டசபையில் பேசினார்.

    Also Read : அதிகரிக்கும் கொரோனா- பண்டிகை காலங்களில் கவனம் தேவை

    அப்போது, தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும்கூட, நோயின் தீவிரம் குறைந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுவோர், தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது தொற்றின் தீவிரம் குறைந்து வருவதை காட்டுகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் தொற்று பாதிப்புக்குள்ளானோர், மீண்டும் தொற்றுக்கு ஆளானோர் பற்றி சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருகிறது. மீண்டும் தொற்று பாதிப்புக்கு ஆளாவது குறைந்து வருகிறது. அதே நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இதை தொடர்ந்து மாநிலத்தில் புதிய தளர்வுகளையும் அமைச்சர் அறிவித்தார். அதன்படி, வாரத்தில் 1000 பேரில் 10 பேர் பாதிக்கப்படுகிற பகுதிகளில் பொது முடக்கம் 3 மடங்காக இருக்கும். மற்ற இடங்களில், கடைகள் வாரத்துக்கு 6 நாட்கள் திறந்திருக்கும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்படுகிறது.

    Also Read : விமானம் பறக்கும் உயரத்தில் பாதியளவு உயரம் கொண்ட சாலை.. இந்தியாவின் புதிய சாதனை!

    வழிபாட்டுத்தலங்களுக்கு 40 பேர் வரலாம். திருமணம் மற்றும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேர் கலந்து கொள்ளலாம்.

    அரசியல், சமூக, கலாசார நிகழ்வுகள் பெரும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க தொடர்ந்து தடை செய்யப்பட்டிருக்கும். உள்ளாட்சி அமைப்புகளின் கூட்டங்கள் நடத்தப்படும்.

    சுதந்திர தினம் மற்றும் ஓணம் பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் வரும் 15-ந் தேதியும், 22-ந் தேதியும் கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: