KERALA ACTRESS COMMITTED SUICIDE DUE TO SEXUAL VIDEO VIRAL IN SOCIAL MEDIA VAI
’இணையத்தில் வெளியான பாலியல் வன்கொடுமை காட்சிகள்’ - மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றதாக கேரள நடிகை கண்ணீர்
14 வயதில் சினிமாவில் நடித்த பாலியல் வன்கொடுமை காட்சியை, துண்டாக்கி இணையத்தில் பரப்பி வருவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி பலமுறை தற்கொலைக்கு முயன்றதாக கேரள நடிகை கதறல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
2013-ஆம் ஆண்டு நடித்த இந்த காட்சிக்காக பலமுறை நடிகை ஷோனா தற்கொலைக்கு முயன்றுள்ளார். சினிமாவில் இடம்பெறாத பாலியல் வன்கொடுமை காட்சிகளை இணையத்தில் கசியவிட்டது யார்? கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ஷோனா ஆபிரகாம். கடந்த சில ஆண்டுக்கு முன்பு ஃபார் சேல் என்ற மலையாள படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் காதல் சந்தியா, அவருக்கு தங்கையாக சோனா நடித்திருந்தார். ஒரு பலாத்கார காட்சியில் சோனா நடித்திருந்தார். சில மாதங்களுக்கு பின்னர் அந்த காட்சிகள் ஆபாச இணையதளங்களில் வெளியானது. அதன் பிறகு தன்னுடைய வாழ்க்கையில் பல வேதனையான சம்பவங்கள் நடந்ததாக தனது முகநூல் பக்கத்தில் சோனா ஆபிரகாம் கூறியுள்ளார்.
14-வது வயதில் 'பார் சேல்' என்ற மலையாள படத்தில் நடித்ததாகவும், கதைப்படி தான் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை பார்க்கும் சந்தியா மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொள்வதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருந்ததாக கூறியிருந்தார். இந்த படத்தின் மூலம் இயக்குநர் சமூகத்துக்கு என்ன கருத்தை சொல்ல வந்தார் என்பது எனக்கு தற்போது வரை புரியவில்லை என்றும் அந்த வீடியோவில் சோனா கூறியுள்ளார்.
அறியாத வயதில் அந்த படத்தில் நடித்ததாகவும், கதைப்படி பலாத்கார காட்சியில் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் கூறியபோது, 150-க்கும் மேற்பட்டோரின் முன்னிலையில் தன்னால் அந்த காட்சியில் நடிக்க முடியாது என கூறியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கொச்சியில் உள்ள இயக்குநர் அலுவலகத்தில் அந்த காட்சி படமாக்கப்பட்டதாகவும், அதன் பிறகு தான் பள்ளி படிப்புக்கு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தான் பிளஸ் 2 படித்தபோது சினிமாவில் இடம்பெறாத பலாத்கார காட்சிகள் ஆபாச இணைய தளங்களில் வெளியாகி தனக்கும், தன் குடும்பத்துக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இதன்பிறகு உறவினர்கள், நண்பர்கள் தன்னை சந்தேக கண்ணுடன் பார்க்க தொடங்கிவிட்டதாகவும் கூறியுள்ளார். பலர் தனக்கு போன்செய்து திட்டியதாகவும், இதனால் தானும், தனது பெற்றோரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கண்ணீர் மல்க அந்த வீடியோவில் சோனா கூறியுள்ளார்.
இதுகுறித்து கேரள முதலமைச்சர், டிஜிபி, சைபர் கிரைம் போலீசார் உட்பட பலரிடம் புகார் கூறியும் வீடியோவை நீக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். சினிமாவில் இடம்பெறாத அந்த காட்சிகள் இயக்குநர், எடிட்டர் மற்றும் தயாரிப்பாளரிடம் மட்டுமே இருந்ததாகவும், அவர்களுக்கு தெரியாமல் எப்படி வெளியானது என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வீடியோவால் மனம் உடைந்த தான் பலமுறை தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நடிகையின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து பல பெண்கள் அமைப்பு நடிகைக்கு ஆதரவாகவும், அந்த வீடியோவை நீக்கக்கோரியும் பதிவிட்டுள்ளனர். இதனால் அந்த வீடியோவை யூடியூப் தளத்திலிருந்து நீக்க கேரள சைபர் கிரைம் போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.