• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தனுஷ் பட கேங்க்ஸ்டர் நடிகரின் காரை அடித்து நொறுக்கிய காங்கிரஸ் தொண்டர்கள்.. முக்கிய சாலையில் பரபரப்பு...

தனுஷ் பட கேங்க்ஸ்டர் நடிகரின் காரை அடித்து நொறுக்கிய காங்கிரஸ் தொண்டர்கள்.. முக்கிய சாலையில் பரபரப்பு...

Jagame Thandhiram actor Joju george

Jagame Thandhiram actor Joju george

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் சிவதாஸ் என்ற  கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜோஜூ ஜார்ஜ்.

  • Share this:
கொச்சியில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் தொண்டர்கள் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜின் காரை அடித்து நொறுக்கியதுடன் நடுரோட்டில் அவருடன் சண்டை போட்ட சம்பவம் கேரளாவை பரபரப்பாக்கியிருக்கிறது. காங்கிரஸ் தொண்டர்கள் தனது பெற்றோர் குறித்து தவறாக பேசியதாக நடிகர் குற்றம்சாட்டிய நிலையில், நடிகர் ஜோஜு ஜார்ஜ் ரவுடி போல நடந்துகொண்டதாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

பிஸியான வைதிலா ஜங்ஷன்:

கடுமையாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தினால் கேரளாவின் மிகவும் பிஸியான போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதியாக கருதப்படும் கொச்சி - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வைதிலா ஜங்ஷனில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பக்கமும் வாகனங்கள் அணிவகுந்து நின்றதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டனர்.

ஜோஜு ஜார்ஜ்:

வைதிலா ஜங்ஷனில் போக்குவரத்து நெரிசலில் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜின் லேண்ட் ரோவர் காரும் சிக்கியது. போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஸ்தம்பித்ததால், நடிகர் ஜோஜு ஜார்ஜ் தனது காரை விட்டு கீழங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தொண்டர்களிடம் சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலா போராடுவது என கேட்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக அங்கு பொதுமக்களும் கூடிவிட, காங்கிரஸ் தொண்டர்களுக்கும், நடிகர் ஜோஜு ஜார்ஜுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

நடிகர் ஜார்ஜின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது..


ஒரு கட்டத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜின் காரை காங்கிரஸ் தொண்டர்கள் அடித்து நொறுக்கினர். இதில் அவருடைய காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. பின்னர் அங்கு பாதுகாப்புக்காக இருந்த போலீசார் தலையிட்டு நடிகர் ஜோஜுவை அங்கிருந்து கூட்டிச் சென்றனர்.

Also read: சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாத பெற்றோர்கள்.. மூடநம்பிக்கையால் பறிபோன சிறுமியின் உயிர்..

மகளிர் காங்கிரஸாரிடம் பிரச்னை:

நடிகர் ஜோஜு ஜார்ஜ் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மகளிர் காங்கிரஸாரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதாகவும் காங்கிரஸ் தரப்பினர் தெரிவித்தனர்.

போராட்ட களத்தில் செய்தியாளர்களும் இருந்ததால் இந்த விவகாரம் லைவ்வாக மலையாள சேனல்களில் ஒளிபரப்பானது. செய்தியாளர்களிடையே பேசிய நடிகர் ஜோஜு ஜார்ஜ், “காரின் கீமோதெரபி சிகிச்சைக்காக ஒருவரை அழைத்துச் செல்வதாகவும், இந்த வெயிலில் எத்தனை பேர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒரு குறிப்பிட்ட கட்சியினரை எதிர்த்து பிரச்னை செய்யவில்லை, பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில் அவர்கள் நடந்துகொண்டதைத் தான் தட்டிக்கேட்டேன். ஆனால் அதற்காக என் வயதான பெற்றோர் குறித்து அறுவறுப்பான சொற்களை பயன்படுத்தி திட்டினர். என்னை வேண்டுமானலும் அடிக்கட்டும், என் பெற்றோரை எப்படி அவர்கள் திட்டலாம்? என நடிகர் ஜோஜூ ஜார்ஜ் கேள்வி எழுப்பினார்.

Also read:   புர்கா அணியாமல் ஜீன்ஸ் அணிந்ததற்காக பெண் வாடிக்கையாளரை அவமதித்து விரட்டியடித்த கடைக்காரர்!

இதனிடையே நடிகர் ஜோஜூ ஜார்ஜின் செயலை கண்டித்து அவரின் வீட்டை முற்றுகையிட சென்ற காங்கிரஸாரை போலீசார் தடுத்தனர்.

காங்கிரஸ் கட்சியின் கேரள மாநில தலைவர் கே.சுதாகரன் நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஒரு ரவுடியை போல காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

ஜகமே தந்திரம் நடிகர்:

திருச்சூரைச் சேர்ந்த நடிகர் ஜோஜு ஜார்ஜ் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியான நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் சிவதாஸ் என்ற  கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார். சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் ஜோஜு பெற்றிருக்கிறார். இயக்குனர் கார்திக் சுப்பாராஜுடன் சேர்ந்து தமிழில் வெளியான சோழா என்ற படத்தை அலி என்ற பெயரில் மலையாளத்தில் தயாரித்தும் வருகிறார். 2021ம் ஆண்டில் மட்டும் 10 படங்களில் ஜோஜு நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது,

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: