30 வருடங்களுக்கு முன் வாங்கிய ரூ.200 கடனை திருப்பியளிக்க இந்தியா வந்த கென்ய எம்.பி!

news18
Updated: July 11, 2019, 3:44 PM IST
30 வருடங்களுக்கு முன் வாங்கிய ரூ.200 கடனை திருப்பியளிக்க இந்தியா வந்த கென்ய எம்.பி!
கென்யா
news18
Updated: July 11, 2019, 3:44 PM IST
நம்முடன் நெருக்கமாக பழகும் நண்பர்களே கடனாக பெரும் பணத்தை திருப்பி அளிக்காமல் சென்றுவிடும் நிலையில், 30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் 200 ரூபாய் கடன் உதவி செய்ததை தற்போது வந்து திருப்பி அளித்து அச்சரியப்படுத்தியுள்ளார் கென்யாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்.

முப்பது வருடங்களுக்கு முன்பு 1985-1989 ஆண்டுகளில் அவுரங்காபாத்தில் இருந்து படித்து பட்டம் பெற்றவர் ரிச்சார்ட் டோங்கி.

அப்போது அவர் கல்லூரியில் படிக்க பணம் இல்லாமல் பொருளாதார சிக்கலில் இருந்துள்ளார். அதை அறிந்து மளிகைக் கடைக்காரரான காஷிநாத் காவ்லி மற்றும் அவரது குடும்பத்தினர் 200 ரூபாய் அளித்து உதவியுள்ளனர்.


ஆனால் தாய் நாடு திரும்பும் முன்பு அதை திருப்பி அளிக்காமல் சென்ற ரிசார்ட், ஒரு நாள் இதை நாம் திருப்பி அளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கென்யா சென்றுவிட்டார்.

தற்போது கென்யாவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ரிசார்ட் 30 வருடங்களுக்கு முன்பு நடந்ததை மறக்காமல் தனது மனைவியுடன் இந்தியா வந்தது மட்டுமல்லாமல் காவ்லியை சந்திக்க சென்றுள்ளார்.

அப்போது ரிச்சார்ட் தான் பெற்ற 200 ரூபாய் நிதி உதவியை திருப்பி அளித்தது காவ்லியின் குடும்பத்தை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளர்.

Loading...

மேலும் பார்க்க:
First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...