டெல்லியில் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் பெண்களுக்கு இலவச பயணம்! கெஜ்ரிவாலின் அசத்தல் திட்டம்

”இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. டெல்லி அரசு இந்த திட்டத்துக்கான மானியத்தை வழங்கும்”

டெல்லியில் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் பெண்களுக்கு இலவச பயணம்! கெஜ்ரிவாலின் அசத்தல் திட்டம்
அரவிந்த் கெஜ்ரிவால்
  • News18
  • Last Updated: June 3, 2019, 4:37 PM IST
  • Share this:
டெல்லியில் அரசுப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் பயணிக்க இலவசம் என்று அம்மாநில ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.

பெண்கள் பாதுகாப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘பெண்கள் பாதுகாப்புதான் ஆம் ஆத்மி அரசுக்கு முக்கியது. நாங்கள் இரண்டு முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளோம். டெல்லி முழுவதும் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களை நிறுவவுள்ளோம். மற்றொன்று, பெண்களுக்கு இலவச பொதுப் போக்குவரத்தை அளிப்பது.

டெல்லியிலுள்ள எல்லா அரசுப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயிலகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்மூலம், அவர்கள் பாதுகாப்பான பயண அனுபவத்தை உணர முடியும். பயணக் கட்டணத்தின் அடிப்படையில் அவர்கள் வாகனத்தை தேர்வு செய்யவேண்டிய அவசியம் இல்லை.


இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. டெல்லி அரசு இந்த திட்டத்துக்கான மானியத்தை வழங்கும். இந்த நிதிச்சுமை யார் மீதும் திணிக்கப்படாது. பல பெண்களுக்கு இந்தப் பயணத்தை பணம் கொடுத்து பயணிக்க முடியும்.

அவர்கள், டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். அவர், இலவசப் பயணத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. யாரெல்லாம் டிக்கெட் வாங்கி பயணிக்க முடியுமோ அவர்கள் டிக்கெட் வாங்கி பயணம் செய்வதை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம்’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தெரிவித்த டெல்லி அதிகாரிகள், ‘டெல்லி அரசுப் பேருந்துகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் சிரமம் இருக்காது. ஆனால், மெட்ரோவைப் பொறுத்தவரை, மாநில அரசும், மத்திய அரசும் 50:50 என்ற கணக்கில் இயங்கிவருகிறது.அதனால், அதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது’என்று தெரிவித்துள்ளார்.

Also see:

First published: June 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்