முகப்பு /செய்தி /இந்தியா / ஆட்டோவில் பயணம்.. ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் விருந்து.. குஜராத்தில் களமாடும் கெஜ்ரிவால்

ஆட்டோவில் பயணம்.. ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் விருந்து.. குஜராத்தில் களமாடும் கெஜ்ரிவால்

ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் அரவிந்த் கெஜ்ரிவால்

ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட அரவிந்த் கெஜ்ரிவால் அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் உணவு அருந்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Gujarat, India

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. டெல்லியில் முதலில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி அரசு டெல்லி மாடல் அரசு என்ற கோஷத்தை முன்னெடுத்து மற்ற மாநிலங்களிலும் தனது கட்சியை வளர்த்தெடுக்கும் வேலையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தனது முயற்சியை வெற்றிகரமாக சாதித்து காட்டி பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை அமைத்துள்ளது. அத்துடன் ஹரியானா மாநிலத்திலும் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. இதைத் தவிர குஜராத் மாநிலத்திலும் அக்கட்சிக்கு நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் கடந்த வருடம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றியது. இதை நம்பிக்கையாகக் கொண்டு அரவிந்த் கேஜ்ரிவால் இந்தாண்டு இறுதியில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்காக தீவிரமாக களமாடிவருகிறார். வெற்றியை குறிவைத்து ஆம் ஆத்மி செயல்பட்டாலும், குறைந்தபட்சம் காங்கிரஸை தாண்டு இரண்டாவது பெரும் சக்தியாக ஆம் ஆத்மி உருவெடுத்தாலும் அது அக்கட்சிக்கு பெரும் முன்னேற்றமாக காணப்படும்.

இந்நிலையில், நேற்று குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற அரவிந்த் கெஜ்ரிவால், அகமதாபாத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வீட்டிற்கு உணவு அருந்த சென்றுள்ளார்.

விக்ரம் தன்தானி என்ற ஆட்டோ ஓட்டுநருடன் அவருடைய ஆட்டோவில் ஏறி வீட்டுக்குச் சென்று உணவு அருந்தினார் அரவிந்த் கெஜ்ரிவால். அட்டோவில் சென்ற அரவிந்த் கெஜ்ரிவாலை பாதுகாப்பு காரணம் காட்டி குஜராத் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதையும் படிங்க: கேரளாவில் 18 நாள், உத்தரப் பிரதேசத்தில் வெறும் 2 நாள்.. இது தான் பாஜகவை எதிர்ப்பதா? ராகுலுக்கு மார்க்சிஸ்ட் கேள்வி

அதற்கு அவர் உங்களின் பாதுகாப்பு எனக்கு தேவையில்லை. நான் மக்களை பார்க்க போகிறேன். என்னை எந்த அடிப்படையில் தடுக்கின்றீர்கள். என்னை பயணம் செய்யாமல் தடுப்பு சிறைப்படுத்துவதற்கு சமம் என வாக்குவாதம் செய்தார். பின்னர் காவல்துறையினர் சமாதானம் ஆகி ஆட்டோவில் செல்ல அனுமதி வழங்கினர். அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் காவல்களிடம் பேசும் இந்த காணொலி சமூக வலைத்தளத்தில் வைராலகிறது.

First published:

Tags: Arvind Kejriwal, Gujarat