டெல்லி வன்முறையின் போது உயிரிழந்த உளவுத்துறை அதிகாரி அங்கித் ஷர்மாவின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறைக்களமாக மாறியது. பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய வன்முறை இரண்டு நாள்களுக்கு நீடித்தது. வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.
இந்த வன்முறையில் சந்த் பாக் பகுதியில் வசித்து வந்த உளவுத்துறை அதிகாரி அங்கித் ஷர்மா வன்முறை கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்நிலையில் அங்கித் ஷர்மாவின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும் வழங்கப்படும் என்றும் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.