Home /News /national /

மனைவி, நாயுடன் நடைப்பயிற்சி செய்ய விளையாட்டு மைதானத்தையே காலி செய்த ஐஏஎஸ் அதிகாரி

மனைவி, நாயுடன் நடைப்பயிற்சி செய்ய விளையாட்டு மைதானத்தையே காலி செய்த ஐஏஎஸ் அதிகாரி

ஐஏஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் கிர்வார்

ஐஏஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் கிர்வார்

டெல்லியில் உள்ள தியாகராஜா விளையாட்டு மைதானத்தில் மாலை 7.30 மணி அளவில் தனது மனைவி மற்றும் வளர்ப்பு நாயுடன் தினமும் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது மனைவி மற்றும் நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஒட்டுமொத்த விளையாட்டு மைதானத்தையும் காலியாக மூடி வைத்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

    டெல்லியின் வருவாய் பிரிவு முதன்மை செயலாளராக இருப்பவர் ஐஏஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் கிர்வார். இவர் டெல்லியில் உள்ள தியாகராஜா விளையாட்டு மைதானத்தில் மாலை 7.30 மணி அளவில் தனது மனைவி மற்றும் வளர்ப்பு நாயுடன் தினமும் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தாங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மைதானத்தில் பயிற்சி செய்யும் விளையாட்டு வீரர்கள் அங்கிருந்து மாலை 6.30 மணிக்கெல்லாம் காலி செய்து வெளியேற வேண்டும் எனவும், அதன் பின்னர் மைதான ஊழியர்கள் மைதானத்தை சுத்தமாக்கி வைக்க வேண்டும் என உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

    இதன்படி கடந்த ஒரு வார காலமாக வீரர்கள் மாலை 6.30க்கு எல்லாம் வெளியேற்றப்பட்டு, ஐஏஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் தனது மனைவி மற்றும் நாயுடன் வாக்கிங் போக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை புகைப்பட ஆதாரத்துடன் இந்தியன் எக்ஸ்பிரெஸ் நாளேடு செய்தியாக வெளியிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரியின் இந்த அதிகார அத்துமீறலுக்கு பல தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர், காங்கிரஸ் தலைவர் மனிஷ் திவாரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட பலர் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து துரிதமாக நடவடிக்கை எடுத்த டெல்லி அரசு, வீரர்கள் பயிற்சி செய்ய இரவு 10 மணி வரை மைதானம் திறந்து வைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


    மேலும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதை டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஒற்றை காலில் நொண்டி அடித்தே பள்ளிக்கு செல்லும் 10வயது சிறுமி.. ஆசிரியை ஆவதே கனவு - உதவிக்கரம் நீட்டிய நெட்டிசன்கள்

    52 வயதான சஞ்ஜீவ் கிர்வார், 1994ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். இவர் சண்டிகர், அருணாசலப் பிரதேசம், அந்தமான் நிக்கோபர் தீவுகள் ஆகியவற்றில் பணியாற்றியுள்ள நிலையில், தற்போது டெல்லியில் பணியாற்றி வருகிறார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Delhi, Sports

    அடுத்த செய்தி