பனியால் மூடப்பட்ட கேதர்நாத் கோவில் - வீடியோ

பனியால் மூடப்பட்ட கேதர்நாத் கோவில் - வீடியோ
பனியால் மூடப்பட்ட கேதர்நாத் கோவில்
  • News18
  • Last Updated: December 4, 2019, 4:07 PM IST
  • Share this:
இமயமலையில் உள்ள புகழ்பெற்ற கேதர்நாத் கோவில், தற்போது பனிப்பொழிவு காரணமாக பனியால் மூடப்பட்டுள்ளது.

இமயமலையில் உள்ள கேதர்நாத் கோவிலுக்கு ஆண்டுதோறும் திரளான பக்தர்கள் சென்று வருகின்றனர். சிவன் கோவிலான இங்கு இந்த வருட சீசனில் மட்டும் 10 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுண்டுவில் இருந்து கேதர்நாத்திற்கு சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் நடத்து சென்று தரிசனம் செய்யும் வகையில் உள்ளது. தற்போது, இமயமலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு இருக்கிறது.


இதனால், கேதர்நாத் கோவில் பனியால் மூடப்பட்டுள்ளது. 2 அடி உயரத்திலான பனிப்போர்வை கோவிலை முழுவதும் சூழ்ந்துள்ளது. தற்போது, தரிசன காலம் இல்லை என்பதால் பக்தர்கள் யாரும் அங்கே செல்லவில்லை. கேதர்நாத் கோவில் பனியால் சூழப்பட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது. 
First published: December 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...