பிரதமர் மோடியுடன் சந்திர சேகர ராவ் சந்திப்பு

ஜன.6-க்கு பிறகு சந்திரசேகர ராவை சந்திக்க அகிலேஷ் திட்டம்

Web Desk | news18
Updated: December 27, 2018, 9:57 AM IST
பிரதமர் மோடியுடன் சந்திர சேகர ராவ் சந்திப்பு
கேசிஆர் - மோடி
Web Desk | news18
Updated: December 27, 2018, 9:57 AM IST
தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்று அணி அமைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ள அவர், இதற்காக நவீன் பட்நாயக், மம்தா பானர்ஜி உள்ளிட்ட மாநில கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில், டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய சந்திரசேகர ராவ், தெலங்கானா மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.

தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ்மேலும் தெலங்கானாவில் தனி நீதிமன்றம் அமைப்பது, புதிய மாவட்டத்தில் கேந்திர வித்தியாலயா பள்ளி அமைப்பது, கரிம் நகரில் ஐஐடி அமைப்பது உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசனை நடந்ததாக குறிப்பிட்டார்.

மேலும் சந்திரசேகர ராவ் மேற்கொண்டுள்ள மாற்று அணி முயற்சிக்கு ஆதரவு அளித்துள்ள மாயாவதி, வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை அவரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதே போல், ஜனவரி 6-ம் தேதிக்கு பிறகு சந்திரசேகர ராவ்வை சந்தித்து அகிலேஷ் யாதவ் ஆலோசனை நடத்துகிறார்.

Also see... பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளை 

Loading...

First published: December 27, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...