மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத 3-வது அணியை உருவாக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் புறப்பட்டுள்ளார். இதற்காக ஒடிசா முதல் உத்தரப்பிரதேசம் வரையிலான நீண்ட பயணத்தை நாளை தொடங்குகிறார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக அல்லாத மகாகத்பந்தன் எனும் மகா கூட்டணியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உருவாக்க முயன்றார்.
அதில் தீவிரம் காட்டும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர அரசியலில் பகையாளியான காங்கிரசுடன், தெலங்கானா தேர்தலில் கூட்டணி அமைத்தார். ராகுலுக்கு உதவியாக எதிர்க்கட்சித் தலைவர்களை அணி திரட்டினார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் நிலையில், மகாகூட்டணியில் திரிணமுல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம், தேசிய மாநாடு, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கரம் கோர்த்துள்ளன.
இதனிடையே பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள், உத்தரபிரதேசத்தில் தனி அணியாக போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மகாகூட்டணியை வீழ்த்தி, களிப்பில் காங்கிரஸ், பாஜக அல்லாத 3-வது அணியை அமைக்கப் போவதாக சந்திரசேகர ராவ் புறப்பட்டுள்ளார். அவர் ஸ்டாலின், மம்தா போன்றோரை ஏற்கனவே சந்தித்து பேசியுள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து அம்முயற்சியை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளார். அதற்காக சிறப்பு விமானத்தில் குடும்ப சகிதமாக ஞாயிறுன்று புறப்படுகிறார்.
முதலில் நாளை மாலை 6 மணிக்கு புவனேஸ்வரில் முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து 3-வது அணி பற்றி பேசுகிறார். 24-ம் தேதி மாலை 4 மணிக்கு கொல்கத்தாவில் மம்தா பேனர்ஜியுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அங்கு பிரதமரை அலுவல்ரீதியாக சந்தித்த பின் உத்தரப்பிரதேசம் சென்று மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்திக்கிறார்.
சந்திர சேகர ராவின் 3-வது அணியில் பட்நாயக் போன்றோர் சேர வாய்ப்பு உள்ளது. மாயாவதி, அகிலேஷ் யாதவ் போன்றோர் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதை உணர்ந்துள்ள சந்திரபாபு நாயுடு, பாஜவுக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்கவே, ராவ் முயற்சி செய்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார். எது எப்படியோ, சந்திர சேகர ராவ், டூர் முடிந்து திரும்பும்போது, அவர் பாஜக-வின் B-டீமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.
Also see... தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chandrasekar rao