என் தந்தை மீது தவறு இருந்தால் அவரைத் தூக்கில் போடலாம் – கத்துவா குற்றவாளியின் மகள்

news18
Updated: April 16, 2018, 5:00 PM IST
என் தந்தை மீது தவறு இருந்தால் அவரைத் தூக்கில் போடலாம் – கத்துவா குற்றவாளியின் மகள்
நீதி கிடைக்குமா?
news18
Updated: April 16, 2018, 5:00 PM IST
‘என் தந்தை மீது தவறு இருந்தால், அவரைத் தூக்கில் போடலாம்’ என கத்துவா பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சி ராமின் மகள் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, அதன் தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், சஞ்சி ராம் என்பவர் பிரதான குற்றவாளியாக கருதப்படுகிறார். மேலும், அவரது மகன் விஷாலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சஞ்சி ராமின் மகள் இந்த விவகாரம் தொடர்பாக இன்று கூறியதாவது: இவ்வழக்கில் எனது தந்தை சஞ்சி ராம் மற்றும் எனது சகோதரர் விஷால் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் இருவரையும் தூக்கில் போடலாம். அதே சமயம், இந்த விசாரணையை நம்பகமான முறையில்  மேற்கொள்ள வேண்டும். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதே சமயம், இந்த வழக்கில் நம்பகமான விசாரணை மேற்கொண்டால்தான் எனது தந்தையும், சகோதரரும் குற்றமற்றவர்கள் என்ற உண்மை தெரியவரும் என்றார் அவர்.  இதனிடையே, சிறுமியின் கொலை வழக்கில் ஆஜராகவுள்ள பெண் வக்கீல் தீபிகா சிங் ராஜவத், தான் எந்நேரமும் கொலை செய்யப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.
First published: April 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்