ஹோம் /நியூஸ் /இந்தியா /

காசியில் களைக்கட்டிய தமிழ் சங்கமம்.. ஜனனி.. ஜனனி.. பாடலை பாடிய இளையராஜா!

காசியில் களைக்கட்டிய தமிழ் சங்கமம்.. ஜனனி.. ஜனனி.. பாடலை பாடிய இளையராஜா!

இளையராஜா

இளையராஜா

Kasi tamil sangamam | டிசம்பர் 16ம் தேதி வரை தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  காசியில் நடைபெறும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் ஜனனி ஜனனி பாடலை பாடிய படி இளையராஜா அவரது உரையை தொடங்கினார்.

  நாடு சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வுடன், தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் முன்னிலைப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, நடைபெறுகிறது.

  இந்நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று முறைப்படி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, இணையமைச்சர் எல்.முருகன், உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் இளையராஜா  திரைப்பட பாடலான ஜனனி, ஜனனி பாடலை பாடிய படி தனது உரையை தொடங்கினார். என்னுடைய உணர்வுகளை முழுமையாக எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை. தமிழ் சங்கமத்தை இந்த புண்ணிய பூமியான காசியில் நடத்த எப்படி யோசனை வந்தது என்பதை வியந்து வியந்து மகிழ்கிறேன். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும் புகழும் கொடுக்க வாழ்த்தி விடைபெறுகிறேன்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Ilayaraja