Home /News /national /

காஷ்மீரில் கைது செய்யப்பட்ட தலைவர்கள் விடுதலை எப்போது? ஆளுநர் ஆலோசகர் புதிய தகவல்

காஷ்மீரில் கைது செய்யப்பட்ட தலைவர்கள் விடுதலை எப்போது? ஆளுநர் ஆலோசகர் புதிய தகவல்

காஷ்மீர்

காஷ்மீர்

தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

  • News18
  • Last Updated :
ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள அம்மாநிலத் தலைவர்கள் ஒவ்வொருவராக விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஆளுநரின் ஆலோசகர் ஃபருக் கான் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு நீக்கியது. மேலும், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் சட்டத்தையும் நிறைவேற்றியது. அதனையடுத்து, தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சுமார் 400-க்கும் மேற்பட்டத் தலைவர்கள் கைது செய்யப்பட்டும், வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்தநிலையில், ஜம்முகாஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசகர் ஃபருக் கான், ‘ஒவ்வொரு தனிப்பட்ட நபர் குறித்தும் ஆய்வு செய்து ஒவ்வொருவராக விடுதலை செய்யப்படுவார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 24-ம் தேதி ப்ளாக் டெவலப்மெண்ட் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுநிலையில், தலைவர்கள் விடுதலை குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Also see:

Published by:Karthick S
First published:

Tags: Jammu and Kashmir

அடுத்த செய்தி