• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • உத்தரப் பிரதேசத்தில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!

உத்தரப் பிரதேசத்தில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

  • Share this:
    உத்தரப் பிரதேசம் மாநில ஆக்ராவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடிய 3 காஷ்மீர் மாணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பு இன்றி வெற்றி பெற்றது. உலகக் கோப்பை போட்டியில்  இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். பாகிஸ்தானின் வெற்றியை பலரும் கொண்டாடிவரும் சூழலில் இந்தியாவின் தோல்வி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

    இந்த தோல்விக்கு இந்திய பந்துவீச்சாளர் முகமது சமி சரியாக பந்து வீசாததே காரணம் என்றும் அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்றும் ஒரு சிலர் மத ரீதியாக விமர்சிக்க தொடங்கினர். சமிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உட்பட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானின் வெற்றியை தொடர்ந்து காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கோரிக்கை வைத்துள்ளார்.

    இதேபோல், உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் ராஜா பல்வந்த் சிங் பொறியியல் கல்லூரியில் பயிலும் காஷ்மீர் மாணவர்களில் சிலர்  இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடியதாக கூறப்படுகிறது.இதையடுத்து 3 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: லக்கிம்பூர் வழக்கு: வெறும் 23 சாட்சிகள்தானா? உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி


    இதேபோல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: