Home /News /national /

10 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரைக்காக காஷ்மீர் PhD மாணவர் கைது

10 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரைக்காக காஷ்மீர் PhD மாணவர் கைது

கோப்புப் படம்

கோப்புப் படம்

10 ஆண்டுகளுக்கு முன் இணைய ஊடகத்தில் எழுதிய கட்டுரைக்காக ஜம்மு காஷ்மீர் முனைவர் பட்ட மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயின்று வரும் 39 வயதான அப்துல் அலா பசிலி என்பவரை ஜம்மு காஷ்மீர் மாநில புலனாய்வு முகமை (SIA) கைது செய்துள்ளது. இவர் பிரிவினையை தூண்டும் விதமாக மிகவும் ஆபத்தான கருத்துக்களை ஆன்லைன் ஊடகத்தில் எழுதிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தி காஷ்மீர் வாலா என்ற ஆன்லைன் ஊடகத்தில் 2011ஆம் ஆண்டு இவர் எழுதிய கட்டுரைக்காக இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு விசாரணை பிரிவான SIA, பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளும்.
    இந்த அமைப்புக்கு கிடைத்த தகவலின் பேரில் அப்துல் அலா பசலி தங்கியிருந்த ஹம்ஹமா வீட்டிலும், ராஜ்பாகில் உள்ள இணைய ஊடக அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் கம்ப்யூடர்கள், லேப்டாப்புகள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்ல் கருவிகள் ஆதாராமாக பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தெரிவித்த சிறப்பு புலனாய்வுக் குழு, ‘ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்து இளைஞர்களை வன்முறையின் பாதைக்கு அழைத்து செல்லும் விதமாக அப்துல்லின் எழுத்துக்கள் உள்ளன. மேலும், போலி கருத்துக்களை கூறி பிரிவினை வாதத்தை தூண்டி நாட்டின் ஒற்றுமையை சீரழிக்கும் விதமாக இவர் எழுதியுள்ளார். இது வெறும் பொய் பிரச்சாரம் மட்டுமல்ல, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் பயங்கரவாத அமைப்புக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் எழுத்து" என அப்துலின் கைதுக்கான காரணத்தை காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

    இந்திய ராணுவ தளபதியாக 'இன்ஜினியர்' முதல்முறையாக நியமனம் - யார் இந்த மனோஜ் பாண்டே

    அப்துல் தனது முனைவர் பட்டம் படிப்பதற்காக மத்திய அரசு மாதம் தோறும் ரூ.30,000 உதவித்தொகை வழங்கிவந்தது. இந்த உதவித்தொகையானது மார்ச் 2021 வரை ஐந்தாண்டுகள் மத்திய அரசு வழங்கியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    அப்துலுடன் சேர்த்து இணைய ஊடகத்தின் ஆசிரியர் மீதும் UAPA மற்றும் IPC ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. NIA எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அப்துலிடம் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Kashmir

    அடுத்த செய்தி