ஹோம் /நியூஸ் /இந்தியா /

காஷ்மீர் தாக்குதலில் தூத்துக்குடியைச் சேர்ந்த வீரர் உள்பட 2 தமிழக வீரர்கள் உயிரிழப்பு

காஷ்மீர் தாக்குதலில் தூத்துக்குடியைச் சேர்ந்த வீரர் உள்பட 2 தமிழக வீரர்கள் உயிரிழப்பு

தமிழக வீரர் சுப்பிரமணியன்

தமிழக வீரர் சுப்பிரமணியன்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி நேற்றைய தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 41 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நேற்று மாலை ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி வெடிமருந்து நிரப்பிய காருடன் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதி தாக்குதல் நடத்தினார்.

இந்த கோர தாக்குதலில் 41 வீரர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். அவர்களில் 38 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த வீரர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி நேற்றைய தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

மற்றொரு வீரரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்த தாக்குதலை அடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு கேபினட் கமிட்டி கூட்டம் நடந்து வருகிறது.

கூட்டத்துக்கு பிறகு பாகிஸ்தான் மீது தூதரக ரீதியிலான தடை விதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also See..

Published by:Sankar
First published:

Tags: Jammu and Kashmir, Lok Sabha Key Constituency