ஹோம் /நியூஸ் /இந்தியா /

#BREAKING | கேபினட் கூட்டம் நிறைவு - காஷ்மீர் விவகாரம் தொடர்பான முடிவுகள் சற்று நேரத்தில் அறிவிப்பு

#BREAKING | கேபினட் கூட்டம் நிறைவு - காஷ்மீர் விவகாரம் தொடர்பான முடிவுகள் சற்று நேரத்தில் அறிவிப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Kashmir Issue | பகல் 12 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் விளக்கம் அளிக்க உள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்க பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

காஷ்மீர் எல்லைப் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் 35 ஆயிரம் வீரர்கள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டு யாத்திரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், மாணவர்கள் விடுதியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

காஷ்மீர் நிலவரம் குறித்து டெல்லியில் உள்துறை செயலாளர் ராஜீவ் கவ்பா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசித்தார்.

காஷ்மீரில் பதற்றம் அதிகரித்தும் வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, ஜம்மு காஷ்மீர் மக்கள் கான்ப்ரன்ஸ் கட்சி நிர்வாகி சஜத் லோன் ஆகியோர் நள்ளிரவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள உமர் அப்துல்லா, மாநில நலனில் உண்மையான அக்கறையில்லாதவர்கள் தான் வன்முறையை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்று குறிப்பிடுட்ள்ளார். இந்த சூழ்நிலையிலும், தனது நம்பிக்கையை கைவிட வில்லை என்றும் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே, ஸ்ரீநகர், ரேஷி, ஜம்முவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உதம்பூர், கத்வா, தோடா உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரம் கூட்டம் நடந்ததை அடுத்து, பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் நாடாளுமன்றத்துக்கு புறப்பட்டனர்.

பகல் 12 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் விளக்கம் அளிக்க உள்ளார்.

Published by:Sankar
First published:

Tags: Article 370, Jammu and Kashmir, Kashmir, PM Modi