காஷ்மீர் விவகாரத்தை இந்தியா பாகிஸ்தான் நாடுகளே தீர்த்துக்கொள்ளும்: பிரதமர் மோடி!

அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள அதிதீவிர தீயை அணைக்க ஜி7 நாடுகள் 155 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உள்ளதாக பிரான்ஸ் அதிபர் மோக்ரான் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: August 27, 2019, 8:26 AM IST
காஷ்மீர் விவகாரத்தை இந்தியா பாகிஸ்தான் நாடுகளே தீர்த்துக்கொள்ளும்: பிரதமர் மோடி!
மோடி
Web Desk | news18
Updated: August 27, 2019, 8:26 AM IST
காஷ்மீர் விவகாரத்தை இந்தியா, பாகிஸ்தான் நாடுகளே தீர்த்துக்கொள்ளும் என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்னையில் இருநாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக கூறி வந்த அதிபர் டிரம்ப் திடீரென பல்டி அடித்துள்ளார். டிரம்ப்-பின் இந்த நிலைப்பாடு இந்தியாவுக்கு கிடைத்த ராஜாங்க வெற்றி என கருதப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில், அந்நாட்டு அதிபர் மேக்ரான் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தைக்கு பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அதிபர் டிரம்ப்பின் சமரசத்தை ஏற்க தயாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, இரு நாடுகளும் தங்களுக்குள் உள்ள பிரச்னைகளை தாங்களாகவே தீர்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார். இந்த விவகாரத்தில் வேறொரு நாட்டை துன்பறுத்த வேண்டாம் என தான் நினைப்பதாகவும் தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக கூறிவந்த அதிபர் டிரம்ப், திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு காஷ்மீர் விவகாரத்தில் அனைத்தும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், பாகிஸ்தானுடன் பேசி தீர்வு காணப்படும் என மோடி கூறியதாக தெரிவித்தார்.


செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, பிரதமர் மோடி இந்தி மொழில் அளித்த பதில் குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், மோடி ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றவர் என்றும் ஆனால், பேசமாட்டார் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

இதனிடையே அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள அதிதீவிர தீயை அணைக்க ஜி7 நாடுகள் 155 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உள்ளதாக பிரான்ஸ் அதிபர் மோக்ரான் அறிவித்துள்ளார். இந்த தொகை உடனடியாக விடுவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமேசான் காடுகளில் வேகமாக பரவி வரும் தீயை அணைக்க பிரான்ஸ் நாட்டு ராணுவம் பிரேசிலுக்கு அனுப்படும் என்றும் மேக்ரான் தெரிவித்தார். அங்கு பற்றி எரியும் தீ சர்வதேச பிரச்னை என ஏற்கெனவே மேக்ரான் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக ஜி 7 மாநாட்டில் பருவநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கம், கடல்களின் சூழல் மற்றும் தூய்மை ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

மேலும் ப்பார்க்க...பஹ்ரைனில் தமிழில் பேசிய பிரதமர் மோடி..
First published: August 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...