• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ‘காஷ்மீர் எங்களுக்குதான்’: அல்கொய்தா பெயரில் போலி வீடியோ வெளியிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்!

‘காஷ்மீர் எங்களுக்குதான்’: அல்கொய்தா பெயரில் போலி வீடியோ வெளியிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்!

அல்கொய்தா

அல்கொய்தா

பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச நிதி நடவடிக்கை பணிக் குழுவின் ( FATF) சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் உள்ளதால் இதுபோன்ற போலி தீவிரவாத இயக்கங்களின் பெயரை பயன்படுத்துகிறது என்று உளவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

  • Share this:
    இந்தியாவின் அங்கமாக உள்ள காஷ்மீர் தங்களுக்குதான் என்று கூறி இந்திய துணைக்கண்டத்தில் பதுங்கியுள்ள அல்கொய்தா தீவிரவாதிகள்  வெளியிட்டதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. இந்த வீடியோவின் பின்னணியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

    காஷ்மீரின் சிறு நிலப்பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் அக்கிரமிப்பு காஷ்மீர் என்று கூறப்படும் இப்பகுதியில் இருந்து பல்வேறு தீவிரவாத அமைப்புகளும் இந்தியாவில் நாசவேலையில் ஈடுபட்டு வருகின்றன. காஷ்மீரை முழுதாக கைப்பற்ற வேண்டும்  என சதிகளை  பாகிஸ்தான் அரசும், இத்தகைய தீவிரவாத அமைப்புகளும் அரங்கேற்றி வருகின்றன. ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் வசம் சென்றதையடுத்து காஷ்மீர் பாதுகாப்பு குறித்து மேலும் அச்சம் எழுந்துள்ளது.

    இந்நிலையில் , இந்திய துணைக் கண்டத்தில் பதுங்கியுள்ள அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் பெயரில் வீடியோ ஒன்று வெளியானது. காஷ்மீர் எங்களுக்குதான் என்று பொருள்படும்படி வெளியாகியுள்ள இந்த வீடியோவில்  பாபர் மசூதி இடிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல் ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தது. 18 நிமிடங்கள் நீளம் கொண்ட இந்த வீடியோவையும் சேர்த்து அல்கொய்தா தீவிரவாதிகள் பெயரில் இந்த வாரத்தில் இரண்டு வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

    முதலில் வெளியான வீடியோவில் அசாம் சம்பவத்துக்கு பழி தீர்க்கப்போவதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், சிஎன்என்- நியூஸ் 18 ஊடகத்திடம் பேசிய உளவுத்துறையைச் சேர்ந்த சில மூத்த அதிகாரிகள், ”அல்கொய்தா, டிஆர்எஃப் மற்றும் இதர குழுக்கள் எல்லாம் பாகிஸ்தானால் உருவாக்கப்பட்டது. இந்த வீடியோவில் பேசப்பட்ட விவகாரத்தை பாகிஸ்தான் தான் எழுதிகொடுத்துள்ளது” என்றும் குறிப்பிட்டார். 

    இதையும் படிங்க: கேரளாவை உலுக்கிய உத்ரா கொலை.. இயற்கைக்கு மாறாக சீண்டிய பாம்புகள் - கணவன் சூரஜ் குற்றவாளி என உறுதியானது எப்படி?


    பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பான சர்வதேச நிதி நடவடிக்கை பணிக் குழுவின் ( FATF) சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் உள்ளதால் இதுபோன்ற போலி இயக்கங்களின் பெயரை பயன்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

    கடந்த மாதம், பாகிஸ்தான் ஊடகங்களில் தலிபான்களை மேற்கோள் காட்டி ஒரு செய்தி வெளியானது. அதில், காஷ்மீர் உட்பட எங்கும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேச தங்களுக்கு  உரிமை உண்டு என்று தாலிபான்கள் கூறியதாக  குறிப்பிடப்பட்டது. இருப்பினும், நியூஸ் 18,  தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீனைத் தொடர்பு கொண்டபோது, தன்னுடைய வார்த்தைகள் திரிக்கப்பட்டுள்ளது  என்று அவர் கூறினார்.

    மேலும் படிக்க: தேவை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதுதான் அரசின் கொள்கை: பிரதமர்!


    மேலும், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் தாலிபான்கள் தலையிட மாட்டார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: