காஷ்மீருக்கு வந்து பாருங்க! ராகுல் காந்திக்கு அழைப்புவிடுக்கும் ஆளுநர்

காஷ்மீருக்கு வருவதற்காக நான் உங்களுக்கு விமானம் அனுப்புகிறேன். வந்து களத்தைப் பார்த்துவிட்டு பின்னர் அதுகுறித்து பேசவேண்டும்.

Web Desk | news18
Updated: August 12, 2019, 9:59 PM IST
காஷ்மீருக்கு வந்து பாருங்க! ராகுல் காந்திக்கு அழைப்புவிடுக்கும் ஆளுநர்
சத்ய பால் மாலிக்
Web Desk | news18
Updated: August 12, 2019, 9:59 PM IST
காஷ்மீர் மாநிலத்துக்கு ராகுல் காந்தி வந்து பார்வையிட வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கும், அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கும் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துவருகிறது.

இந்த விவகாரம் குறித்து சனிக்கிழமை பேசிய ராகுல் காந்தி, ‘காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன. இந்த விவகாரத்தை பிரதமர் மோடி வெளிப்படைத் தன்மையுடன் கையாள வேண்டும்’ என்று தெரிவித்தார். ராகுல் காந்தியின் கருத்துக்கு காஷ்மீர் மாநில துணைநிலை ஆளுநர் சத்யபால் மாலிக் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த அவர், ‘காஷ்மீருக்கு வரவேண்டும் என்று ராகுல் காந்திக்கு நான் அழைப்புவிடுக்கிறேன். காஷ்மீருக்கு வருவதற்காக நான் உங்களுக்கு விமானம் அனுப்புகிறேன். வந்து களத்தைப் பார்த்துவிட்டு பின்னர் அதுகுறித்து பேசவேண்டும். நீங்கள் ஒரு பொறுப்பான தலைவர். இதுபோன்று நீங்கள் பேசக்கூடாது.

வெளிநாட்டு ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுகின்றன. எல்லா மருத்துவமனைகளும் திறந்தநிலையிலேயே உள்ளன. ஒருவராவது துப்பாக்கிக் குண்டுகளுக்கு காயமடைந்துள்ளனரா என்பதை நிருபித்துக் காட்டுங்கள். நான்கு பேருக்கு மட்டும் பெல்லட் குண்டுகளால் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. யாருக்கும் பெரிய அளவிலான காயம் ஏற்படவில்லை’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...