காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா! மக்களவையிலும் நிறைவேறியது

இன்று அந்த மசோதா மீது மக்களவையில் விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு எதிராக வாதங்களை முன்வைத்தனர்.

news18
Updated: August 6, 2019, 7:18 PM IST
காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா! மக்களவையிலும் நிறைவேறியது
ஜம்மு காஷ்மீர்
news18
Updated: August 6, 2019, 7:18 PM IST
காஷ்மீர் மாநில மறுசீரமைப்பு மசோதா மின்னணு வாக்குப் பதிவு முறையில் மக்களவையிலும் நிறைவேறியது.

காஷ்மீர் மாநிலத்துக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவை ரத்து செய்வதற்கு ஆகஸ்ட் 5-ம் தேதியே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். அந்த தகவலை, நேற்று மாநிலங்களவையில் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

மேலும், காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான காஷ்மீர் மாநில மறுசீரமைப்பு மசோதாவையும் தாக்கல் செய்தார். நேற்று, அந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்தநிலையில், இன்று அந்த மசோதா மீது மக்களவையில் விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு எதிராக வாதங்களை முன்வைத்தனர்.


அ.தி.மு.க உறுப்பினர் ஓ.பி.ரவிந்திரநாத் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். அதனையடுத்து, அந்த மசோதா மீது மின்னணு முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. மசோதாவுக்கு ஆதரவாக 366 பேரும், மசோதாவுக்கு 66 பேரும் வாக்களித்தனர். அதனையடுத்து, சோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

Also see:

First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...