மக்களின் வாழ்க்கையை மாற்றி சமூக புரட்சி செய்ய போராடியவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலினுக்கு ராகுல் கடிதம்!

மக்களின் வாழ்க்கையை மாற்றி சமூக புரட்சி செய்ய போராடியவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலினுக்கு ராகுல் கடிதம்!

பிற்போக்குத் தனமான முயற்சிகளை திணிக்கும் அரசுக்கு எதிரான இன்றைய போராட்டங்களுக்கு மிகப்பெரிய உந்துதலாக இருப்பவர் கருணாநிதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

  • Share this:
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளில், அவரின் மகத்தான பங்களிப்பை நான் பாராட்ட விரும்புகிறேன். நவீன தமிழகத்தை வடிவமைத்ததில் அவரது மகத்தான பங்களிப்பை பெருமைப்படுத்த விரும்புகிறேன். அவர் நவீன தமிழகத்தை மட்டும் உருவாகவில்லை, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி சமூக புரட்சி செய்ய போராடியவர்.

Also read: உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மீண்டும் ஆலோசனை!

கூட்டாட்சி அரசியலில் பல்வேறு மாநில உரிமைகளை அங்கீகரிப்பதற்காக போராடியவர். கருணாநிதி  அளித்த அடித்தளம் மக்களை பாதுகப்பதற்கு தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது.

மேலும் துணை கலாச்சாரங்கள், அடையாளங்களை  உள்ளடக்கிய தேசத்திற்காக பாடு படுங்கள் என  குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி,  இன்று நாம் பிற்போக்குத் தனமான முயற்சிகளை திணிக்கும் அரசுக்கு எதிரான இன்றைய போராட்டங்களுக்கு மிகப்பெரிய உந்துதலாக இருப்பவர் கருணாநிதி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மக்கள் இயக்கத்தின் துணிச்சலான போராட்டத்தின் வலிமையையும், முற்போக்கான சிந்தனையையும் உருவாக்கியவர்.  கருணாநிதியின் மரபு நமக்கு தொடர்ந்து வழிகாட்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
Published by:Esakki Raja
First published: