‘நீங்கள் பேசுவது எனக்கு புரியவில்லை’: இந்தியில் பேசிய எம்.பி.களுக்கு கார்த்தி சிதம்பரம் தமிழில் பதிலடி

‘நீங்கள் பேசுவது எனக்கு புரியவில்லை’: இந்தியில் பேசிய எம்.பி.களுக்கு கார்த்தி சிதம்பரம் தமிழில் பதிலடி

கார்த்தி சிதம்பரம்

குடியரசுத் தலைவரின் உரை மக்களின் பிரச்னைகள் குறித்து பேசாமல் ஆளுக்கட்சியின் குரலாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.

 • Share this:
  நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரை குறித்து சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேசிக் கொண்டிருந்தபோது, சில எம்.பிகள் அவரின் பேச்சுக்கு எதிப்பு தெரிவித்து இந்தியில் பேசினர். அவர்களிடம் அமைதியான முறையில் தமிழில் பேசி பதிலடி கொடுத்தார்.

  கார்த்தி சிதம்பரம், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையை விமர்சித்து பேசினார். குடியரசுத் தலைவரின் உரை மக்களின் பிரச்னைகள் குறித்து பேசாமல் ஆளுக்கட்சியின் குரலாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.

  மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் குறித்து தமது உரையில் குடியரசுத் தலைவர் எதுவும் பேசவில்லை என்று அப்போது குற்றம் சாட்டினார். அதேபோல், பாப் பாடகியின் ட்விட்டருக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கும் நம்முடைய அரசு, உண்மையான புள்ளி விவரங்களுக்கு பதில் அளிப்பதில்லை எனவும் கூறினார்.

  மேலும் படிக்க... 18-ஆம் நூற்றாண்டின் சிந்தனையுடன், 21-ஆம் நூற்றாண்டின் வேளாண் சவால்களை சந்திக்க முடியாது - பிரதமர் மோடி

  அப்போது சில எம்.பிக்கள் கார்த்தி சிதம்பரத்தின் இந்த பேச்சுக்கு, இந்தியில் மறுப்பு தெரிவித்து குரல் எழுப்பி வந்தனர். இதைக் கேட்டு ஆவேசம் அடைந்த கார்த்தி சிதம்பரம் “நீங்கள் என்ன பேசுறீங்க என எனக்கு புரியவில்லை” என அமைதியான குரலில் சொல்லிவிட்டு தனது பேச்சைச் தொடர்ந்தார்.
  Published by:Suresh V
  First published: