தனக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ ரெய்ட் நடத்தியது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் எம்பி நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,நாடாளுமன்ற சிறப்புரிமையை சிபிஐ மீறியதாக தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மக்களவை உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சில நாட்களுக்கு முன்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக,’ எத்தனை முறைதான் சோதனை நடத்துவார்களோ’ இதனை கணக்கில் வைத்துகொள்ள வேண்டும் ‘ என கார்த்தி சிதம்பரம் கிண்டல் செய்திருந்தார்.
ப.சிதம்பரம் கடந்த 2022ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது அதிகாரத்தை பயன்படுத்தி கார்த்தி சிதம்பரம் 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. .இதேபோல் அமலாக்கத்துறையும் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் 10 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தனது சிறப்புரிமைகள் மற்றும் உரிமைகள் சிபிஐ மூலம் பறிபோவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாயுடன் நடைபயிற்சி செய்ய மைதானத்தை காலி செய்த ஐஏஎஸ் தம்பதி அதிரடி டிரான்ஸ்பர் - உள்துறை அமைச்சகம் நடவடிக்கை
மேலும், ‘நான் முற்றிலும் சட்டவிரோதமான மற்றும் வெளிப்படையான அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு பலியாகிவிட்டேன். எனக்கு தொடர்பே இல்லாத 11 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கிற்காக என் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பிரதமர் மோடியை பற்றி புகழ்வதை தவிர்த்து வேறு எதுவும் தெரியவில்லை: குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்
இந்த சோதனையில் , நாடாளுமன்ற நிலைக்குழு தொடர்பான என்னுடைய முக்கியமான தனிப்பட்ட மற்றும் ரகசியமான கோப்புகளை சிபிஐ அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர். அதிர்ச்சியூட்டும் வகையில், கமிட்டிக்கு வரவழைக்கப்பட்ட சாட்சிகளிடம் நான் கேட்க நினைத்த எனது வரைவு குறிப்புகள் மற்றும் கேள்விகளும் கூட கைப்பற்றப்பட்டன. மேலும். சாட்சிகள் குழுவிடம் அளித்த வாக்குமூலங்கள் தொடர்பான எனது கையால் எழுதப்பட்ட குறிப்புகளும் கைப்பற்றப்பட்டன . நாடாளுமன்ற உறுப்பினராக என்னுடைய நடவடிக்கையில் சிபிஐ குறுக்கீடு செய்வது ஜனநாயக நடைமுறைகள் மீதான நேரடி தாக்குதல்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.