துப்பாக்கிக் குண்டு போல வெளியே வருவீர்கள்! தந்தைக்கு கார்த்தி சிதம்பரம் உருக்கமான கடிதம்

ப.சிதம்பரம்- கார்த்தி சிதம்பரம்

ஒரு காலத்தில் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருந்த ஊடகங்கள், தற்போது அவர்களுடைய சுதந்திரம் குறித்து அவர்கள் விளக்க வேண்டும்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  அரசியல் நாடகத்துக்கு எதிராக துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டா போல சிறையிலிருந்து நீங்கள் வருவீர்கள் என்று ப.சிதம்பரத்துக்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்துக்கு இன்று பிறந்தநாள். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்துக்கு அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கடிதம் எழுதியுள்ளார்.

  அந்தக் கடிதத்தில், ‘உங்களுக்கு இன்றுடன் 74 வயதாகிறது. எந்த 56-லும் உங்களைத் தடுக்க முடியாது. தற்போது மிகச் சிறிய விஷயங்களுக்கும் பெரிய கொண்டாட்டங்கள் நடைபெறுவதைக் காண முடிகிறது. ஆனால், நீங்கள் பெரிய விஷயத்துக்கும் கொண்டாட்டத்தை விரும்பாதவர். நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம். நீங்கள் இல்லாதது இதயத்தில் வலியை ஏற்படுத்துகிறது.

  நீங்கள் விரைவில் வீட்டுக்கு வந்து எங்களுடன் இணைந்து கேக் வெட்ட வேண்டும் என்று விரும்புகிறோம். உங்களுக்கு செய்தித்தாள்களும் குறிப்பிட்ட செய்தி சேனல்களும் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிகிறேன். ஒரு காலத்தில் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருந்த ஊடகங்கள், தற்போது அவர்களுடைய சுதந்திரம் குறித்து அவர்கள் விளக்க வேண்டும். டெல்லி கூட்டத்துக்கு முன்னால் நீங்கள் ஒருபோதும் அமைதியாக இருக்கப்போவதில்லை.

  தற்போது நடக்கும் அரசியல் நாடகத்துக்கு எதிராக துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டா போலச் சிறையிலிருந்து நீங்கள் வருவீர்கள், உண்மையான உங்கள் வெற்றிக்காகக் காத்திருக்கிறோம். 100 நாள் ஆட்சியை கொண்டாடும் விதமாக பிரகாஷ் ஜவடேகர் கொடுத்த செய்தியாளர்கள் சந்திப்பை நீங்கள் தவறவிட்டுவிட்டீர்கள். கடினமான சண்டையின் வெற்றிக்கான மகிமையை காண எல்லாரும் காத்திருக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  Also see:

  Published by:Karthick S
  First published: