விசா முறைகேடு வழக்கில் கைது நடவடிக்கையை தடுக்க முன் ஜாமின் கோரும் கார்த்தி சிதம்பரம்..
விசா முறைகேடு வழக்கில் கைது நடவடிக்கையை தடுக்க முன் ஜாமின் கோரும் கார்த்தி சிதம்பரம்..
கார்த்தி சிதம்பரம்
Karti Chidambaram: பஞ்சாப்பில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மின் நிலையத்தில் பணியாற்ற, 200-க்கும் மேற்பட்ட சீனர்களுக்கு 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக விசா பெற்று தந்ததாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
விசா முறைகேடு வழக்கில் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்தை நோட்டீஸ் வழங்காமல் முன்னறிவிப்பின்றி கைது செய்ய மாட்டோம் என டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ உறுதி அளித்துள்ளது.
பஞ்சாப்பில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மின் நிலையத்தில் பணியாற்ற, 200-க்கும் மேற்பட்ட சீனர்களுக்கு 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக விசா பெற்று தந்ததாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அந்த வழக்கு நீதிபதி எம்.கே. நாக்பால் தலைமையில் விசாரணைக்கு வந்த போது கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதாக இருந்தால் 3 நாட்களுக்கு முன்னர் முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
கார்த்தி சிதம்பரம் மே 24 ஆம் தேதி இந்தியா திரும்ப உள்ள நிலையில், மனுதாரர் சட்ட ரீதியான நிவாரணம் பெறுவதற்கு இந்த அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை ஏற்றுக்கொண்ட சிபிஐ அதிகாரிகள் நோட்டீஸ் வழங்காமல் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மாட்டோம் என்று உறுதி அளித்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.