எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்துவதா? கொந்தளிக்கும் எம்.பி கார்த்தி சிதம்பரம்

எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்துவதா? கொந்தளிக்கும் எம்.பி கார்த்தி சிதம்பரம்
  • Share this:
கொரோனா பாதிப்பு செலவீனங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக்கூட்டம் இன்று நடந்தது. காணொளி காட்சி மூலமாக அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், பல முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கால் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை சீர் செய்ய அரசுக்கு நிதி தேவைப்படுகிறது. இதனால், அரசின் செலவினங்களை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.


பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அனைத்து எம்.பி.க்களின் மாத ஊதியத்தில் 30 சதவிகிதத்தை ஓராண்டுக்கு பிடித்தம் செய்ய அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அனைத்தும், கொரோனா நிவாரணத்திற்காக செலவிடப்படும்’ என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை கொரோனாவுக்காக செலவிடுவதற்கு எம்.பிக்கள் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர்.

இதுகுறித்த சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் ட்விட்டர் பதிவில், ’கொரோனா வைரஸின் தாக்க செலவீனங்களுக்கு அரசாங்கம் நிதியைத் திரட்ட வேண்டுமென்றால் பல வழிகள் உண்டு. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாடு நிதியை நிறுத்தம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும், இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரத்தை குறைப்பது போலவும், அதிபர் ஆட்சி முறை போன்ற ஒன்றை மறைமுகமாக புகுத்துவதாக உள்ளது. இந்த அரசாங்கம் பிரதமரின் விளம்பரங்களுக்கும், தற்பெருமைக்கும் செலவு செய்யும் கோடிக்கணக்கான ரூபாய்களை வீணாக்கும் விதமாக இருக்கும் இந்த திட்டங்களை நிறுத்தினாலே அதற்கான நிதிகிடைக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, மணிஷ் திவாரி, கவுரவ் கோகாய் உள்ளிட்ட எம்.பிக்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி நிதியை ஒதுக்குவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also see:
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading