இந்தியாவின் நம்பிக்கைக்கு மதிப்பளித்த இம்ரான் கானுக்கு நன்றி - பிரதமர் மோடி

இந்தியாவின் நம்பிக்கைக்கு மதிப்பளித்த இம்ரான் கானுக்கு நன்றி - பிரதமர் மோடி
பிரதமர் மோடி
  • Share this:
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான கர்தார்பூர் வழித்தட திறப்பு விழா இன்று நடந்துவரும் நிலையில், பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், தனது இறுதி காலத்தை தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு உட்பட்ட கர்தார்பூரில் கழித்ததாக கூறப்படுகிறது. அவரது நினைவாக கர்தார்பூரில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தர்பார் சாகிப் என்ற பெயரில் குருத்வாரா நிறுவப்பட்டுள்ளது.

இந்த குருத்வாராவிற்கு சீக்கியர்கள் பயணம் மேற்கொள்ள விசா வாங்கிச் செல்வதில் சிரமங்கள் இருந்ததால் கர்தார்பூர் வழித்தடம் அமைக்க இருநாடுகளிடையே முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக்கிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், வரும் 12ம் தேதி குருநானக்கின் 550-வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கர்தார்பூர் வழித்தடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. கர்தார்பூர் வழித்தடத்தை இந்தியாவில் பிரதமர் மோடியும், பாகிஸ்தானில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானும் திறந்து வைத்தனர்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் நம்பிக்கைக்கு மதிப்பளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

கர்தார்பூர் வரும் இந்திய யாத்ரீகர்களுக்கு இன்றும், வரும் 12ம் தேதியும் கட்டணம் வசூலிக்கப்படாது என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. கர்தார்பூர் வழியாக நாள்தோறும் 5 ஆயிரம் யாத்ரீகர்களுக்கு அனுமதியளிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்