கர்நாடகாவில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் டெல்லி பப்ளிக் பள்ளி, வர்தூர்,கோபாலன் சர்வதேச பள்ளி, புதிய அகாடமி பள்ளி, செயின்ட் வின்சென்ட் பால் பள்ளி, இந்தியன் பப்ளிக் பள்ளி, கோவிந்த்புரா, எபினேசர் சர்வதேச பள்ளி, எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய 7 பள்ளிகளுக்கு இன்று காலை 11 மணியளவில் மின் அஞ்சல் ஒன்று வந்தது.
அதில், 'மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டு உங்கள் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். இது ஒன்றும் ஜோக் இல்லை. மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டை உங்கள் பள்ளியில் வைத்துள்ளோம்.
இதையும்படிங்க - யானையிடம் இருந்து சிறுவனை காப்பாற்ற போராடிய தந்தை - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
உடனடியாக போலீசை கூப்பிடுங்கள். இல்லாவிட்டால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள். தாமதம் செய்ய வேண்டாம். இதற்கு மேல் எல்லாம் உங்கள் கையில்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் பள்ளி வளாகத்தை போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர். இதற்கு முன்பாக பள்ளி மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இதையும்படிங்க - ம.பியில் பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேரை அரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்.. 2 போலீசார் சஸ்பெண்ட்!
இதில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து இந்த சம்பவம் ஒரு புரளி என போலீசார் தெரிவித்தனர். மின் அஞ்சல் செலுத்திய நபர் யார் என்கிற விபரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.