கர்நாடகா தேர்தல்: 700-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் 4 பேர் வெற்றி

news18
Updated: May 16, 2018, 4:34 PM IST
கர்நாடகா தேர்தல்: 700-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் 4 பேர் வெற்றி
குறைவான வாக்கு வித்தியாசத்தில் 4 பேர் வெற்றி
news18
Updated: May 16, 2018, 4:34 PM IST
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் 700-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளில் 222 தொகுதிகளில் மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் ஜெயநகர் தொகுதிகளில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், 222 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 தொகுதிகளிலும், பிற கட்சி வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், 4 தொகுதிகளில் வெற்றி – தோல்வியை 700-க்கும் குறைவான வாக்குகள் நிர்ணயித்துள்ளது தெரியவந்துள்ளது. மஸ்கி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரதாப் கெளடா பாட்டீல் வெறும் 213 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மாநிலத்திலேயே மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நிர்ணயித்த தொகுதி இதுதான்.

பவகடா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வெங்கடரமணப்பா 409 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதேபோல், ஹிரேகேரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பஸவன கெளடா பாட்டீல் 555 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

குந்த்கோல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சன்னபஸப்பா சத்யப்பா ஷிவாலி 634 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நிர்ணயித்துள்ள இந்த 4 தொகுதிகளுமே காங்கிரஸ் வசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்