நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி!

Karnataka Trust Vote | எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை காங்கிரஸ் அவைத்தலைவர் சித்தராமையா கடுமையாக எதிர்த்தார்.

news18
Updated: July 29, 2019, 11:45 AM IST
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி!
எடியூரப்பா
news18
Updated: July 29, 2019, 11:45 AM IST
கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தனது அரசின் மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பை இன்று நடத்திய நிலையில், 106 உறுப்பினர்கள் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து புதிய முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார். அவர் தனது அரசு மீதான பெரும்பான்மையை சட்டப்பேரவையில் இன்று நிரூபிக்க உள்ளார்.

இதுதொடர்பாக பெங்களுருவில் உள்ள சான்செரி நட்சத்திர விடுதியில் பாஜக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.


இன்று காலை சட்டப்பேரவை கூடியதும் எடியூரப்பா தனது அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, “இந்த மசோதாவை எதிர்க்கிறேன். ஏனென்றால், இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனினும், எடியூரப்பாவை வாழ்த்துகிறேன். அவர் மக்களுக்காக பணியாற்றுவார் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

மசோதா மீது பேசிய முன்னாள் முதல்வர் குமாரசாமி, “பதவி என்பது யாருக்கும் நிலையில்லை. மோடியானாலும் சரி, நட்டாவானாலும் சரி அது எல்லாருக்கும் பொருந்தும். மக்களுக்காக பணியாற்றுங்கள்” என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து பேசிய எடியூரப்பா, “பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடமாட்டேன்” என்று தெரிவித்தார். இதனை அடுத்து, மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்தது. 106 உறுப்பினர்கள் ஆதரவுடம் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது.
First published: July 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...