பாகிஸ்தான் குடியரசு தினத்திற்கு வாழ்த்துக்கூறி வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் முதோல் நகரைச் சேர்ந்த குத்மா ஷேக் என்ற அந்தப் பெண், கடந்த 23-ம்தேதி பாகிஸ்தான் குடியரசு தினத்தையொட்டி வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசை வைத்திருக்கிறார். அதில், அனைத்து நாடுகளிலும் அமைதி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஏற்படுவதற்கு இறைவன் அருள்புரிவானாக என்று குத்மா ஷேக் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அருண் குமார் பஜந்திரி என்பவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153 ஏ (மத அடிப்படையில் இரு பிரிவினருக்கு இடையே வெறுப்பை தூண்டுதல்), 505 (2)ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - இது முகக்கவசமா? தாடியா? - சுரேஷ் கோபியை பார்த்து கேள்வி எழுப்பிய வெங்கையா நாயுடு..
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் கூறுகையில், 'குத்மா ஷேக்கின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பாகிஸ்தான் குடியரசு தினவிழாவை கொண்டாடுவது போல் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அது வன்முறைக்கு வழிவகுக்கும். அதை எதிர்த்து இன்னொரு தரப்பினர் வன்முறையில் ஈடுபடுவார்கள். இவை தடுக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.