Home /News /national /

சொத்து தொடர்பாக முன்விரோதம்.. பெண் வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய நபர் (வீடியோ)

சொத்து தொடர்பாக முன்விரோதம்.. பெண் வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய நபர் (வீடியோ)

பெண் வழக்கறிஞர் மீது தாக்குதல்

பெண் வழக்கறிஞர் மீது தாக்குதல்

கர்நாடகாவில் பெண் வழக்கறிஞர் மீது நபர் ஒருவர் பொது இடத்தில் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளார். அங்கு ஏராளமானோர் இருந்தபோதிலும் ஒருவர் கூட தடுத்து நிறுத்தாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடக மாநிலம் பாலகோட்டில், முன்விரோதம் காரணமாக பெண் வழக்கறிஞர் மீது நபர் ஒருவர் தாக்குதல் நடத்திய காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடகாவை சேர்ந்தவர் சங்கீதா சிக்கேரி. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.  இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மஹாந்தேஷ் சோளச்சகுடா (Mahantesh Cholachagudda). இருவருக்கு இடையே சொத்து விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இதன் காரணமாக இரண்டு குடும்பத்தினரும் இதற்கு முன்பாகவே சண்டையிட்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில்,  பாகல்கோட் பகுதியில் வைத்து சங்கிதா மீது மஹாந்தேஷ் தாக்குதல் நடத்தியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர், நவநகரில் உள்ள பாகல்கோட்டின் தோட்டக்கலை அறிவியல் பல்கலைக்கழகத்தில் புகைப்படக் கலைஞராகப் பணிபுரிகிறார்.  சங்கீதாவின் வயிற்றில் எட்டி உடைத்தும் முகத்தில் அடித்தும் அவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.



    ஆட்கள் பலரும் இருக்க பொதுவெளியில் வைத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. உதவிக்கு வருமாறு சங்கீதாவின் கணவர் கோரிக்கை வைத்தபோதும் யாரும் தாக்குதலை தடுக்க முன்வரவில்லை. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து மஹாந்தேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேலும் படிக்க: தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்ற 16 வயது மாணவி ரயில் மோதி உயிரிழப்பு!


    சொத்து விவகாரம் தொடர்பாக  பாகல்கோட் பாஜக செயலாளர் மீது தான் காவல்துறையில் அளித்துள்ள புகாரின் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சங்கீதா கூறியுள்ளார். எனினும், மற்றவர் கூறி இந்த தாக்குதலை நடத்தவில்லை என மஹாந்தேஷ் தெரிவித்துள்ளார். போலீசார் தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Brutal attack on woman, Karnataka

    அடுத்த செய்தி