• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கும் இளைஞர்கள்..பதற வைக்கும் வீடியோ - கர்நாடகாவில் நடந்த கொடூரம்

இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கும் இளைஞர்கள்..பதற வைக்கும் வீடியோ - கர்நாடகாவில் நடந்த கொடூரம்

கர்நாடகா

கர்நாடகா

திருட்டு பட்டம் கட்டி இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கிய இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  • Share this:
    கர்நாடகாவில் இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி நான்கு இளைஞர்கள் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடக மாநிலம் யாத்கிரி நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இளம்பெண்ணை நான்கு நபர்கள் தாக்கும் வீடியோ வெளியானதையடுத்து போலீஸார் இந்த வீடியோ தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரை தாக்குக் நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்த சம்பவத்தில் நான்கு இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    இளம்பெண் ஒருவர் அங்குள்ள வீட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். வீட்டில் இருந்த நகை திருடுபோனதாக கூறப்படுகிறது. இந்த பெண்ணின் மீது சந்தேகப்பட்டு இந்தப் பெண்ணை விசாரிப்பதாக கூறி நான்கு இளைஞர்கள் அவரை நிர்வாணப்படுத்தி குச்சிகளை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். வலி தாங்கமுடியாமல் அந்தப்பெண் அலறித்துடிக்கிறார். நான் நகைகளை திருடவில்லை என அந்தப்பெண் இளைஞர்களிடம் மன்றாடுகிறார்.

    Also Read: குடும்ப மானத்தை வாங்கிட்டாரு.. தந்தையை கொன்ற மகன் சொன்ன பகீர் காரணம்!

    அந்த கும்பல் ஈவு இரக்கமின்றி தாக்குகின்றனர். சுமார் 2.5 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் எதுவும் கொடுக்கவில்லை. வீடியோ வெளியானதால் தற்போது இந்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் 4 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

    இந்தச்சம்பவம் குறித்து பேசிய யாத்கிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வேத மூர்த்தி, “ இந்தச் சம்பவம் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது. அந்தப்பெண் இரவு வேலை முடித்துவிட்டு பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளார். அப்போது காரில் வந்த 4 இளைஞர்கள் அவரை வலுக்கட்டாயமாக ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.  சஹாபூர் பகுதியில் வைத்து அவரை கொடுமைப்படுத்தி வீடியோ பதிவு செய்துள்ளனர்.  இந்த வழக்கில் பீமராயா, லிங்கராஜூ, ஷாரானு, ஐயப்பா உள்ளிட்ட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அந்தப்பெண் அளித்த புகாரின் பேரில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: