Home /News /national /

மழை பெய்ய வேண்டி மயானத்தில் ஆத்மாகளுக்கு தாகம் தீர்த்த மக்கள் - உடனடியாக தூரல் வந்த அதிசயம்!

மழை பெய்ய வேண்டி மயானத்தில் ஆத்மாகளுக்கு தாகம் தீர்த்த மக்கள் - உடனடியாக தூரல் வந்த அதிசயம்!

மாதிரி படம்

மாதிரி படம்

சுமார் 25 புதைகுழிகளை தோண்டி தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த நிலையில், கடைசி குழிக்கு தண்ணீர் விட்டுவிட்டு கிராம மக்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர்.

    வறட்சி ஏற்படும் காலங்களில், மழை பெய்ய வேண்டி அவரவர் நம்பிக்கைகளுக்கு உட்பட்ட மழை தெய்வங்களை வணங்குவது என்பது உலகெங்கிலும் நடைமுறையில் உள்ள வழிபாட்டு முறைதான். இந்திய கிராமங்கள் பலவற்றில் மழை வேண்டி கழுதைகள், தவளைகள், காக்கைகள் போன்றவற்றுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கமும் உண்டு.

    பொதுவாக மழை பெய்ய வேண்டும் என்ற கூட்டு வழிபாட்டில் தெய்வங்களை வணங்குவது வழக்கம். ஆனால், கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள காளகேரி கிராமத்தில் சற்று விநோதமான சடங்குகளை செய்கின்றனர். இங்கு மயானத்திற்கு சென்று, புதைக்கப்பட்ட உடல்களின் தலைப்பகுதியை நோக்கி குழி தோண்டி, குழாய் மூலமாக தண்ணீர் விடுகின்றனர். அதாவது, தாகத்தில் இருக்கின்ற இறந்த ஆத்மாக்களுக்கு தண்ணீர் வழங்கினால், மழை பெய்யும் என்பது இவர்களது நம்பிக்கையாக இருக்கிறது.

    ஏன் இந்த வழிபாடு?

    கர்நாடக மாநிலத்தில் தற்போது ஏறக்குறைய அனைத்து பகுதிகளிலும் இடைவிடாத மழை பெய்து வருகிறது. சில இடங்களில் அதிகப்படியான மழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், ஒட்டுமொத்த மாநிலமும் மழையால் குளிர்ந்து கொண்டிருக்கும் சமயத்தில், காளகேரி கிராமத்தில் ஒரு சொட்டு மழைகூட பெய்யவில்லை. இதனால், அப்பகுதி விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்தனர்.

     

    இதை தொடர்ந்து, கிராம மக்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். இதில் பழங்கால முறைப்படி, இறந்த ஆத்மாக்களின் தாகத்தை தீர்த்தால் மழை பெய்யும் என்று ஒருசிலர் கூற, அதை கிராம மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

    ஒரு மாதத்தில் இறந்தவர் பட்டியல்

    விநோத சடங்கை செய்வதற்காக, கடந்த ஒரு மாதத்தில் இறந்து புதைக்கப்பட்டவர்களின் பட்டியலை கிராம மக்கள் தயார் செய்தனர். மயானத்தில் அவர்கள் எங்கு புதைக்கப்பட்டனர் என்ற விவரம் அவர்களது குடும்பத்தினர் மூலமாக தெரிந்து கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, உடல்கள் புதைக்கபட்ட இடங்களில் தலைப் பகுதி இருக்குமிடம் நோக்கி 2 அடி ஆழத்திற்கு குழி தோண்டி, குழாய்களை பொருத்தினர். டாங்கர் லாரி மூலமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    Also Read : அண்டார்டிகாவில் வழக்கத்திற்கு மாறாக திடீரென பிங்க் நிறமாக மாறிய வானம்

    சுமார் 25 புதைகுழிகளை தோண்டி தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த நிலையில், கடைசி குழிக்கு தண்ணீர் விட்டுவிட்டு கிராம மக்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர். அவர்களது நம்பிக்கை வீண் போகாத வண்ணம், திடீரென்று லேசாக மழை தூரல் பொழிந்தது.

    எப்படி தொடங்கியது இந்த சடங்கு

    காளகேரி கிராமத்தில் சுமார் 1,500 பேர் வசிக்கின்றனர். இங்கு துவரம் பருப்பு சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. மழை இல்லாமல் ஒவ்வொரு முறை சாகுபடி பாதிக்கப்படும்போது இந்த விநோத சடங்கை அவர்கள் நடத்துகின்றனர்.

    பல ஆண்டுகளுக்கு முன்பாக கிராமத்தில் இறந்த ஒருவரை, வாயை மூடாமல் புதைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த ஆண்டு மிக கடுமையான பஞ்சம் ஏற்பட்டு அனைவரும் பாதிக்கப்பட்டனர். இதற்குப் பரிகாரம் கூறிய ஜோதிடர் ஒருவர், இறந்த நபரின் தாகத்தை தீர்க்க வேண்டும் என்றும், அப்படி செய்தால் மழை பெய்யும் என்றும் கூறினாராம். இதைத் தொடர்ந்து, இறந்த நபர் புதைக்கப்பட்டிருந்த குழியை தோண்டி தண்ணீர் விடப்பட்ட நிலையில், அனைவரும் ஆச்சரியம் அடையும் வகையில் மழை பெய்ததாக நம்பப்படுகிறது. அதே மரபு இன்றும் தொடர்கிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி