கர்நாடக சட்டப்பேரவையில் கடும் அமளி! பாஜக - காங்கிரஸ் இடையே கடும் வாக்குவாதம்
11:35 (IST)
குறிப்பிட்ட நேரத்தை கொடுத்து அதற்குள் எல்லாவற்றையும் முடிக்க முடியாது. நாம் ஏன் இந்த நிலைக்கு வந்தோம் என்று விவாதிக்க வேண்டும். அதற்கான விவாதத்தை எடுத்துச் செல்ல வேண்டும் - குமாரசாமி
11:32 (IST)
வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என்று அவசரப்படுத்தக் கூடாது - குமாரசாமி
11:31 (IST)
ஆட்சியை எப்படியாவது கலைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி செயல்படுகிறது - குமாரசாமி
11:31 (IST)
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
11:30 (IST)
இன்னும் 4 ஆண்டுகள் அரசுக்கு இருக்கும் நிலையில் எடியூரப்பாவுக்கு அவசரம் ஏன்? - குமாரசாமி பேச்சு
11:28 (IST)
ஆட்சியைத்தக்கவைக்க 108 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸ் - மஜத வசம் 101 எம்.எல்.ஏ.க்களும், பாஜக வசம் 106 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
11:23 (IST)
என்ன நடக்கிறது என்பதை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர் - நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் குமாரசாமி பேச்சு