முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடக அரசின் அதிரடி ஆஃபர்… போக்குவரத்து விதிமீறல் அபராதத்தில் 50% ‘டிஸ்கவுண்ட்…’

கர்நாடக அரசின் அதிரடி ஆஃபர்… போக்குவரத்து விதிமீறல் அபராதத்தில் 50% ‘டிஸ்கவுண்ட்…’

பெங்களூரு போக்குவரத்து காவல்துறை

பெங்களூரு போக்குவரத்து காவல்துறை

சாலை விதிமுறைகளை மீறியதற்காக விதிக்கப்பட்ட அபராத தொகையை இன்னும் கட்டாமல், பாக்கி வைத்திருப்பவர்கள் பிப்ரவரி 11 ஆம் தேதிக்குள் செலுத்தினால் ஆஃபர் அறிவி்த்துள்ளது கர்நாடக போக்குவரத்து துறை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

சாலை விதிமுறைகளை மீறியதற்காக விதிக்கப்பட்ட அபராத தொகையை இன்னும் கட்டாமல், பாக்கி வைத்திருப்பவர்கள் பிப்ரவரி 11 ஆம் தேதிக்குள் செலுத்தினால் டிஸ்கவுண்ட் என அறிவித்துள்ளது கர்நாடக போக்குவரத்து துறை.

பெருநகர சாலைகளில் வாகன தனிக்கையில் ஈடுபடும் போலீசார், லைசென்ஸ், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது, அதிக நபர்களை ஏற்றிச் செல்வது உள்ளிட்ட மோட்டார் வாகன விதிகளுக்கு எதிரான சட்ட மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிப்பார்கள். இன்று பெரு நகரங்களில் இப்படியாக அபராதம் விதிக்க போலீசாரே தேவையில்லை அதற்காக பிரத்தியேகமாக கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் சாலை விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்களைச் செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டறிந்து அவர்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதம் குறித்துக் குறிப்பிட்ட நபருக்கு ஆன்லைன் மூலமே தகவலும் அனுப்பப்படுகிறது.

இவ்வாறு விதிக்கப்பட்ட ஏகப்பட்ட அபராதங்கள் வசூல் செய்யப்படாமல் இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் மட்டும் மொத்தம் ரூ. 530 கோடி அபராதம் வசூல் செய்யப்படாமல் நிலுவையில் இருக்கிறது.  இதில் பெங்களூருவில் மட்டும் ரூ. 500 கோடி அபராத கட்டண வசூல் பாக்கி உள்ளது. மீதம் உள்ள 30 கோடி ரூபாய் தான் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் பாக்கி உள்ளது.

இந்நிலையில் பாக்கியுள்ள அபராதங்களை வசூலிக்கும் வகையில் கர்நாடக மாநில போக்குவரத்து போலீசார் ஒரு புதிய ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளனர். அதன்படி கர்நாடக மாநிலம் முழுவதும் போக்குவரத்து விதி மீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டதை கட்டாமல் இருப்பவர்கள் வரும் பிப் 11ம் கட்டினால், விதிக்கப்பட்ட அபராத தொகையில் 50 விழுக்காடு கட்டினால் போதும் என்று அறிவித்துள்ளது.

அனைவருக்கும் சமமான சட்டம் என்ற அடிப்படையில் கர்நாடக மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு மேற்கொண்ட பரிந்துரையின் அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது கர்நாடக மாநில போக்குவரத்து துறை. அதன் அடிப்படையில் இது தற்போது நடை முறைக்கு வந்துள்ளது. பெங்களூருவில் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் தங்கள் வாகனங்கள் மீதுள்ள அபராதத்தைச் செலுத்திச் சரி செய்ய நினைத்தால் பெங்களூருவில் உள்ள 48 டிராஃபிக் போலீஸ் ஸ்டேஷனில் எந்த ஸ்டேஷனிற்கு வேண்டுமானாலும் சென்று அபராத தொகையை 50 சதவீத தள்ளுபடியுடன் கட்டலாம்.

அல்லது நகரில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள டிராஃபிக் மேனேஜ்மென்ட் சென்டர்களிலும் கட்டலாம். அல்லது ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்றால் https://bangaloretrafficpolice.gov.in என்ற தளத்தில் செலுத்தலாம். பெங்களூருவிற்கு வெளியில் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் அபராதம் செலுத்த விரும்பினால் கர்நாடக ஒன் அல்லது ஏதாவது ஒரு காவல் நிலையத்திற்கு சென்றும்  செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் : ரொசாரியோ ராய்

First published:

Tags: Bengaluru police, Fine for over speed, Traffic Police, Traffic Rules